பார்க்க

E   |   සි   |  

2026-11-25

செய்தி வகைகள் : சபை அலுவல்கள் 

2026 நவம்பர் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : பாலின அடிப்படையிலான வன்முறைக்கு (GBV) எதிரான உலகளாவிய 16 நாட்கள் செயற்பாட்டு வேலைத்திட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41எ (1) எனும் உறுப்புரையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட, அரசியலமைப்புப் பேரவையின் எட்டாவது அறிக்கை 


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன - இரண்டு மனுக்கள் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி - இரண்டு மனுக்கள் 
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார  - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச
ஹோமாகம தாவர வைரஸ் அடையாள நிலையம் மற்றும் கன்னொறுவை தாவர பிறப்புரிமை மூலவளங்கள் நிலையம் எதிர்நோக்கும் சவால்கள்

மேற்சொன்ன வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான பிரச்சினைகள் குறித்த கூற்றொன்றினை பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2027) - (ஒதுக்கப்பட்ட பத்தாம் நாள்) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மூலிகைச் செய்கையை ஊக்குவித்தலும் சித்த மருத்துவத்தை வலுப்படுத்தலும்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1913 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 26ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2026-11-27

2026 நவம்பர் 27ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.'தித்வா' சூறாவளியால் உயிரிழந்தவர்களின் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154ண(4)(அ) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2027 ஆம் ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவினால் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகள்(ii)    2025 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேதத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை(iii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபையின் வருடாந்த அறிக்கை(iv)    2025 ஆம் ஆண்டுக்கான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆண்டறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) சேன நாணாயக்கார - இரண்டு மனுக்கள்(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ சஜித் பிரேமதாசநிலையான இலக்குகளின் ஊடாக சுற்றுலாத் துறையின் முன்னேற்றம்அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்'தித்வா' புயலால் உயிரிழந்தவர்களுக்கு முதலாவது ஆண்டு நினைவு அஞ்சலி குறித்த கூற்றொன்றினை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் முன்வைத்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2027) - (ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டாம் நாள்) - குழு(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“பத்துளுஓயா ஜும்ஆ பள்ளிவாசலுக்குப் பின்புறமுள்ள காணியை மையவாடியாகப் பயன்படுத்த அனுமதி கோரல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற தாஹிர் மரைக்கார் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1847 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 28ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


2026-11-26

2026 நவம்பர் 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நாமல் சுதர்சன - இரண்டு மனுக்கள் (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக - மூன்று மனுக்கள் (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் பியன்வில - மூன்று மனுக்கள்(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள வன மற்றும் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திலுள்ள பிரச்சினைகள்மேற்சொன்ன வினாவிற்கு சுற்றாடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2027) - (ஒதுக்கப்பட்ட பதினோராம் நாள்) - குழு(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 12 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வருவன சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(ii)    மீயுயர் நீதிமன்றங்களின் கட்டிடத் தொகுதி முகாமை சபையின் வருடாந்த அறிக்கை (2022) (iii)    குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பிற்கான தேசிய அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2022)(iv)    குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பிற்கான தேசிய அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2023)(v)    இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2022) (vi)    இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2023) (vii)    அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2020) (viii)    அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2021) (ix)    அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2022) (x)    அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2023) (xi)    தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2022) (xii)    தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2023)அதனையடுத்து, 1813 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 27ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


2026-11-23

2026 நவம்பர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “பாலின அடிப்படையிலான வன்முறைக்கு (GBV) எதிரான உலகளாவிய 16 நாட்கள் செயற்பாட்டு வேலைத்திட்டத்தை” முன்னிட்டு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான அடையாளச்சின்னம்2 : 2026 நவம்பர் 12 அன்று சமர்ப்பிக்கப்பட்ட 2027 வரவு செலவுத் திட்ட உரை மற்றும் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அச்சிடப்பட்ட பிரதிகள்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் ஆண்டறிக்கை(ii)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆண்டறிக்கை(iii)    2018 ஆம் ஆண்டுக்கான வ/ப லங்கா கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை(iv)    2024 ஆம் ஆண்டுக்கான நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி - ஆறு மனுக்கள்(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ ரவி கருணாநாயக்கபணவியல் கொள்கை இறுக்கமாக்கலினால் பணவீக்கம் மற்றும் கடன் வழங்கலில் ஏற்படும் தாக்கம்அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்இலங்கையின் வருடாந்த மீன் உற்பத்தி தொடர்பாக 2026.11.05 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2027) - (ஒதுக்கப்பட்ட ஒன்பதாம் நாள்) - குழு(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)(ii)    வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)சபையால் நிறைவேற்றப்பட்டது.அதனையடுத்து, 1833 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 25ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


2026-11-21

2026 நவம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்2 : குழுநிலை விவாதத்தின் போதான ஆசன ஒதுக்கம்3 : குழுநிலைச் செலவினத் தலைப்புகளின் திகதி மாற்றம்பத்திரங்கள் சமர்ப்பித்தல்2027 வரைவு வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டின் நிரல்களில் உத்தேச திருத்தங்களின் பட்டியல்குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான - ஒன்பது மனுக்கள்(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனாசெம்மணி மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளின் தற்போதைய நிலைகௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.சிறப்புரிமைக் கேள்விகள்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா  பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மேதகு இம்ரான் கான் தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணையொன்றைச் சமர்ப்பிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டமைஇன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) - (ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள்) - குழு(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“கிண்ணியா தள மருத்துவமனையை மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்வாங்குதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1852 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 23ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks