பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் 2026.03.06ஆம் திகதி சான்றுரைப்படுத்தினார்.
இந்தச் சட்டமூலங்கள் 2026 பெப்ரவரி 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தன.
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் ஊடாக ஆள்கடலில் அபாயகரமான அவுடத கடத்தல்கள் மற்றும் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்குத் தற்பொழுது உள்ள சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துகின்றன.
இதற்கு அமைய நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமாகவும், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமாகவும் நடைமுறைக்குவருகின்றன.
2026-03-11
உலகின் தற்பொது நிலவும் நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் மார்ச் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் பாராளுமன்றம் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடவுள்ளது. இந்தக் காலப்பகுதிக்கான பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய தீர்மானம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் 2026.03.06 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய 2026 மார்ச் 17ம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் குறித்த விவாதம் இடம்பெற்று அங்கீகரிக்கப்படவுள்ளது.இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மார்ச் 18ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மார்ச் 19ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் உலகின் தற்பொது நிலவும் நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும். 2026 மார்ச் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை 19.03.2026 ஆம் திகதி எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட உலகின் தற்பொது நிலவும் நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இரண்டாவது நாளும் தொடரும்.
2026-03-03
2026 மார்ச் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கான பாராளுமன்ற அலுவல்களில் மாற்றங்களை மேற்கொள்ள கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (மார்ச் 03) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இதற்கு அமைய அன்றையதினத்திற்குத் திட்டமிடப்பட்டிருந்த தனியார் உறுப்பினர் பிரேரணைகளைப் பிறிதொரு தினத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும், இதற்குப் பதிலாக பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2026.02.28ஆம் திகதிய 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஜனாதிபதியின் பிரகடனம் உள்ளடக்கப்பட்ட தீர்மானத்தை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், பி.ப 5.00 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான பிரகடனம் விவாதம் இன்றி அனுமதிக்கப்படவுள்ளதுடன், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.அதேநேரம், இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய அன்றையதினம், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.அத்துடன், புதன் (04) மற்றும் வியாழக்கிழமைகளுக்கான (05) பாராளுமன்ற அலுவல்கள் முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய முன்னெடுக்கப்படும்.
2026-02-26
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு விவாதம் மார்ச் 04ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒத்திவைப்பு விவாதம் மார்ச் 05ஆம் திகதிபாராளுமன்றம் மார்ச் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூடவுள்ளது. கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கு அமைய 2026 மார்ச் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 2467/67ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மார்ச் 04ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மார்ச் 05ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை மார்ச் 08ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மார்ச் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனையடுத்து, மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 மணிவரை தனியார் உறுப்பினர் பிரேரணைகள் தொடர்பான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்தனியார் உறுப்பினர் பிரேரணைகௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சிதேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல்.கௌரவ சமிந்த விஜேசிறிவாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் தொடர்பில் பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரித்தல்.கௌரவ ரவி கருணாநாயக்கபுலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை களுக்குத் தீர்வு காணச் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் தாபித்தல்.கௌரவ லால் பிரேமநாத்அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.கௌரவ ரோஹண பண்டாரபேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்.கௌரவ நலின் பண்டார ஜயமஹபெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல்.கௌரவ ரவீந்திர பண்டாரபைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்.இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-02-25
இலங்கை பிரதி சபாநாயகருடனும் இரு தரப்புக் கலந்துரையாடல்பாராளுமன்றக் குழுக்களுடன் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் மாற்றம் குறித்துக் கலந்துரையாடல்இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஹங்கேரியின் தேசிய சட்டமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் (கலாநிதி) லாஜோஸ் ஓலா (Dr. Lajos Oláh) அவர்கள் இலங்கை சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை 23.02.2026ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.ஹங்கேரி பிரதி சபாநாயகரை வரவேற்ற இலங்கை சபாநாயகர், இலங்கைக்கும் ஹங்கேரிக்கும் இடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையில் காணப்படும் வலுவான உறவுகளையும் நினைவுகூர்ந்தார். குறிப்பாக இந்நாட்டின் வீதி அபிவிருத்தி மற்றும் நீர் சுத்திகரிப்புத் திட்டங்கள், GSP சலுகை உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகள் மற்றும் ஏனைய சர்வதேச மட்டங்களில் ஹங்கேரி வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.ஊழல் மற்றும் வறுமையை ஒழிப்பதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், முதலீட்டு வாய்ப்புக்களை விஸ்தரிக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் வலியுறுத்தினார். அத்துடன், இலங்கையில் காணப்படும் முதலீடுகள் மற்றும் வர்த்தக வாய்ப்புக்களை ஆராய்வதற்கு ஹங்கேரி முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார். சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை எடுத்துரைத்த சபாநாயகர், கடந்த கால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் ஹங்கேரியிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறான பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் உறுதிப்படுத்த பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை – ஹங்கேரி பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை அமைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் இங்கு மேலும் தெரிவித்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த ஹங்கேரியின் கௌரவ பிரதி சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பை வலியுறுத்தினார். இலங்கையின் சுற்றுச்சூழல், இயற்கை அழகு, வளமான கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றையும் அவர் பாராட்டினார்.திறந்த பாராளுமன்ற முறைமையை மேம்படுத்தல், பொதுமக்களுடனான இணைப்பை வலுப்படுத்தல் மற்றும் அனுபவங்கள், நல்ல நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளல் மற்றும் பாராளுமன்றங்களின் ஆய்வுக்கான திறன்ங்களை மேம்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் “INTER PARES” உலகளாவிய திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஹங்கேரி எதிர்பார்ப்பதாகவும் கௌரவ பிரதி சபாநாயகர் (கலாநிதி) லாஜோஸ் ஓலா குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதன் முக்கியத்துவம், இலங்கைக்கும் ஹங்கேரிக்கும் இடையே நேரடி விமானங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையிலான கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்புக்கள் போன்ற விடயங்களையும் அவர் இங்கு வலியுறுத்தினார்.ஹங்கேரிக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் அவர் இலங்கை சபாநாயகருக்கு அழைப்பு விடுத்தார்.இந்த விஜயத்தின் போது ஹங்கேரியின் கௌரவ பிரதி சபாநாயகர், இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். சுமுகமாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், செயற்கை நுண்ணறிவில் (AI) வளர்ந்து வரும் உலகளாவிய போக்குகள் மற்றும் சவால்கள், இரு நாடுகளிலும் உள்ள அரசியல் கட்டமைப்புக்கள், மாணவர் பாராளுமன்றம் போன்ற மக்களுடனான இணைப்புக்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன.இதேநேரம், ஹங்கேரி தூதுக் குழுவினருக்கும், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் பணியாற்றுவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவரும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சருமான (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன மற்றும் இரு குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை திறம்பட எதிர்கொள்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை உறுதி செய்வதற்காக வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புகள், நெறிமுறை தரநிலைகள் மற்றும் நிர்வாக வழிமுறைகளை நிறுவுவதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் திறன் பரிமாற்றத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொடர்பில் பாராளுமன்ற உபகுழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஹங்கேரியின் கௌரவ பிரதி சபாநாயகர் (கலாநிதி) லாஜோஸ் ஓலா முன்மொழிந்தார்.செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய சவால்களுக்கு பதிலளிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்தக் கலந்துரையாடல் வலியுறுத்தியது. மேலும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நிலையான தொழில்நுட்ப முன்னேற்றத்தை உறுதி செய்யும் அதே வேளையில், புதுமைகளை ஊக்குவிப்பதற்கான ஹங்கேரி மற்றும் இலங்கை இடையேயான பரஸ்பர உறுதிப்பாடும் இங்கு வலியுறுத்தப்பட்டன.இதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, ஹங்கேரிக்கான கென்சியூலர் ஷெவந்த ஹரேந்திர சுதாரக மென்டிஸ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இலங்கை பாராளுமன்றத்தின் வரலாறு மற்றும் மரபுகள் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் ஹங்கேரி தேசிய சட்டமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் இலங்கை பாராளுமன்றத்தில் சுற்றுப் பயணத்தையும் மேற்கொண்டார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks