E   |   සි   |  

2025-11-21

செய்தி வகைகள் : சபை அலுவல்கள் 

2025 நவம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : வாய்மூல விடைக்கான வினாக்கள் வழிகாட்டல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்கள் மூலம் திருத்தி அமைக்கப்பட்ட 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆவது பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆவது பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஒற்றோபர் 24 ஆம் திகதிய 2459/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ii)    2022/2023 மற்றும் 2023/2024 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனியின் வருடாந்த அறிக்கைகள்
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஊவா மாகாண சபை தொடர்பான விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(v)    2024 ஆம் ஆண்டுக்கான ஜய கன்டேனர் டர்மினல்ஸ் லிமிடெட்டின் ஆண்டறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா

புத்தளம் ஆதார வைத்தியசாலை தொடர்பான விபரங்கள்

மேற்சொன்ன வினாவிற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2026) - குழு (ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உப்பு உற்பத்திக்கான வசதிகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1815 மணியளவில் பாராளுமன்றமானது 2025 நவம்பர் 22ஆந் திகதி சனிக்கிழமை 0900 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2026-09-11

2026 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2024 ஆம் ஆண்டுக்கான அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆண்டறிக்கை(ii)    2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை விமானப் படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iii)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 யூன் 18 ஆம் திகதிய 2493/36 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(iv)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 யூன் 18 ஆம் திகதிய 2493/37 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(v)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 யூன் 18 ஆம் திகதிய 2493/38 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(vi)    2025 ஆம் ஆண்டுக்கான கற்புல ஊனமுற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ ரணசிங்ஹ                    (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான - இரண்டு மனுக்கள் (v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சஜித் பிரேமதாச‘அஸ்வெசும’ நலன்புரித்திட்டத்தில் உள்ள சிக்கல்கள் கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii)    கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் துறைமுகங்கள் மற்றும் விமானத்துறை சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களின் விபரங்கள் அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i)    நாட்டில் உருவாகி வரும் எல் நினோ (El Nino) வானிலை நிலைமை காரணமாக விவசாயத்தின் மீது ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றிய கூற்றொன்றினை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் முன்வைத்தார்.(ii)    இலங்கையில் எல் நினோ நிலைமை தொடர்பான கூற்றொன்றினை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் முன்வைத்தார்.(iii)    ‘செஸ் வரி மற்றும் உள்ளூர் தொழிற்சாலைகள் தொடர்பான பிரச்சினைகள்’ தொடர்பாக 2026.05.22 ஆம் திகதி, ‘செயற்படாத மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களால் அரசுக்குச் சொந்தமான வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு’ தொடர்பாக 2026.08.05 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரினால் எழுப்பிய வினாக்களுக்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுமாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2026 ஜனவரி மாதம் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2026 டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-•    பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல்மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை ஒழுங்குபடுத்த வேண்டியிருப்பினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றை மேற்பார்வை செய்வதற்கு ஏற்புடைய சட்டங்கள் திருத்தப்படாத காரணத்தினால், 21 ஆண்டுகளுக்கும் அதிகமாக பெற்றோலியம் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்கள் ஒழுங்குபடுத்தப்படாமலிருக்கும் நிலையை மாற்றுவதற்காக ஏற்புடைய சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.•    இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குதல்2018 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையின் வருடாந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக விழ்ச்சியடைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாலும் இதனால் எதிர்காலத்தில் இலங்கையில் இளைஞர் சனத்தொகை நிச்சயமாக வீழ்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உள்ளதாலும் இளைஞர் சனத்தொகை இவ்வாறு வீழ்ச்சியடையும்போது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறையில் பாதகமான தாக்கங்கள் ஏற்படக் கூடும் என்பதாலும் இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்ப அலகுகளை கவரக்கூடிய ஊக்குவிப்புத் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.•    பிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகையை அறவிடுவதை நிறுத்துதல்நவீன பாடசாலைக் கல்வி முறையைப் போன்றே பாரம்பரியக் கல்வி முறையான பிரிவென கல்வி முறையும் இலங்கையில் நடைமுறையிலுள்ள பிரதான கல்வி முறையாக காணப்படுவதாலும், நவீன பாடசாலைக் கல்வி முறையில் அதன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும் அங்கீகாரமும் பிரிவென கல்விக்கு அல்லது அதன் ஆசிரியர்கள் மற்றும் பிக்கு மாணவர்கள், பொதுநிலை மாணவர்கள் ஆகிய இரு தரப்புக்கும் உள்ளபடியே கிடைப்பதில்லை என்பதாலும், பிரிவென கல்வி தொடர்பில் ஒரு முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ள பிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகை அறிவிடுவதை 2026 ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 01ஆம் திகதியிலிருந்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.•    மலைப்பாங்கான பிரதேசங்களில் உணவுப் பயிர்களைப் பயிரிடுதல்2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இலங்கைக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ‘தித்வா சூறாவளி’ காரணமாக கேகாலை, கண்டி, மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் மலைசார்ந்த பிரதேசங்கள் பெருமளவில் மண்சரிவுக்கு உள்ளாகியிருப்பதாலும், தற்போது இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களில் குரங்கு, மந்தி, மர அணில் போன்ற வனவிலங்குகளால் பயிர்களுக்குச் சேதங்கள் ஏற்படுகின்றமையினாலும், இவ்வனவிலங்குகளின் உணவுத் தேவைக்காகவும், சுற்றாடல் சமநிலையைப் பாதுகாப்பதற்கும், மண்ணரிப்பைத் தடுப்பதற்கும், மேற்படி மண்சரிவுக்குள்ளாகியுள்ள மலைப்பாங்கான பிரதேசங்களில் பலா, மா, ஈரப்பலா, காட்டுமா போன்ற உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.•    கித்துள்  கைத்தொழிற்றுறையை முன்னேற்றுதல்யுனெஸ்கோ அமைப்பு, இலங்கையின் கித்துள் வடித்தல் தொழில்நுட்பத்தினை உலக பாரம்பரியமாக பெயரிட்டுள்ளதனூடாக எமது நாட்டைப் பற்றிய கௌரவம் உலகத்தின் முன்னிலையில் உயர்ந்துள்ள காரணத்தினாலும், காலி, மாத்தறை, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, கம்பஹா உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களில் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் இந்த பாரம்பரிய கித்துள் சார்ந்த கைத்தொழிலைப் பாதுகாத்தவாறு சுமார் ஆயிரக்கணக்கான கைத்தொழிலாளர்கள் இத்தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ளமையினாலும், இந்தக் கைத்தொழிலை முன்னேறி வரும் சுற்றுலாத் துறையுடன் ஒன்றிணைப்பதற்கும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கிராமிய சாதாரண மக்களது பொருளாதார முன்னேற்றத்திற்கான புதியதொரு பாதையை அமைப்பதற்கும், கித்துள் கைத்தொழிற்றுறையின் நீண்டகால பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் பொருத்தமான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம்  பிரேரிக்கின்றது.•    இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை நிறுவுதல்இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிற்சந்தைக்கான தேவைகளை நிவர்த்தி செய்யும் நவீன தொழில்நுட்ப பட்டதாரிகளை வழங்கும் பல்கலைக்கழகம் என்பதால், இலங்கையில் வளர்ச்சியடைந்து வரும் மருத்துவத்துறை உள்ளிட்ட உலகளாவிய தேவைகளையும் கருத்திற்கொண்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை நிறுவ வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரோிக்கின்றது.ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹகீம்(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர். எம். சமந்த ரனசிங்ஹ  அதனையடுத்து, 1738 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-09-10

2026 செப்டம்பர் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “இலங்கை தேசிய புகைப்படக் கலைச் சங்கம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தினை பரிசீலனைக்காக சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2025 ஆம் ஆண்டுக்கான தபால் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை(ii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iii)    2024 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை(iv)    2024 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை நிலக்கரி (தனியார்) நிறுவனத்தின் ஆண்டறிக்கை(v)    2025 ஆம் ஆண்டுக்கான தேசிய மிருகக் காட்சிசாலைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி - இரண்டு மனுக்கள் (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன்                    (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக்க ஜயகொடி - இரண்டு மனுக்கள் (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சஜித் பிரேமதாசநாட்டில் உருவாகி வரும் எல் நினோ (El Nino) வானிலை நிலைமை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தணிப்பு நடவடிக்கைகள் (ii)    கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்புத்தளம் மாவட்டத்தில் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் கௌரவ சுற்றாடல் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i)    நாட்டில் உருவாகி வரும் எல் நினோ (El Nino) வானிலை நிலைமை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தணிப்பு நடவடிக்கைகள் பற்றிய கூற்றொன்றினை சுற்றாடல் அமைச்சர் கௌரவ (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி அவர்கள் முன்வைத்தார்.(ii)    எல் நினோ நிலைமையின் கீழ் நீர் விநியோகம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பான கூற்றொன்றினை வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ அவர்கள் முன்வைத்தார்.கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர்அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுதித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு, தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை 2026  ஜனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால், குறிப்பிட்ட விசேட குழுவிற்கு வழங்கப்பட்ட கால எல்லை 102 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2026 டிசம்பர் 19 ஆம் திகதி வரை கால நீடிப்புச் செய்யப்படுமாக.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் தீர்மானம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்)சபையால் அங்கீகரிக்கப்பட்டது.ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“இலங்கை முழுவதும் கிராம மக்களுக்கான சிறப்புப் பராமரிப்பு மையங்களை நிறுவுதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1749 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-09-09

2026 செப்டம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் அமர்வு2 : பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து அறிக்கைகளையும் இலத்திரனியல் வடிவில் பெறுவது குறித்த ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் விருப்பத்தையும் கண்டறிதல் பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2025 ஆம் ஆண்டுக்கான நீதிச்சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(ii)    2025 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iv)    2023 ஆம் ஆண்டுக்கான ஜி எஸ் எம் பி டெக்னிகல் சேவிசஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை(v)    2024 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட குருநாகல் பெருந்தோட்ட கம்பனியின் ஆண்டறிக்கை(vi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு மாநகர சபை (பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் – 488) தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vii)        அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு மாநகர சபை (பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் – 490) தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(viii)    2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகளின் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை(ix)    2025 ஆம் ஆண்டுக்கான கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(x)    2025 ஆம் ஆண்டுக்கான தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(xi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கட்டிடத் துறை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xii)        அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அரசு தொழிற்சாலைகள் துறை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xiii)    அப்போதைய நீர் வழங்கல் அமைச்சு, அப்போதைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, அரசுத் தொழிற்சாலைகள் துறை மற்றும் கட்டிடத் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி                    (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் ராஜபக்ஷ் (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த புஷ்ப குமார(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சிபாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையிலான படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திட்டம் (ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்பாதுகாப்புப் பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்)சபையால் நிறைவேற்றப்பட்டது.ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத்(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹஅதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 10ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-09-08

2026 செப்டம்பர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சனாதிபதியின் செய்திகள்1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : "இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல் 3 : “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல் 4 : “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல் 5 : “நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல் சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─ •    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் ஒன்பதாவது தொகுதியின் XLVII (47) ஆம் பகுதியையும்; மற்றும்•    2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் II (2) ஆம் பகுதி(ii)    2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 31(1)(ஆ) ஆம் பிரிவின் பிரகாரம், இலஞ்சம் அல்லது ஊழலுக்கெதிரான சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டு, நிதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அவதானிப்புகளுடன் சமர்ப்பிக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழலுக்கெதிரான சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2024 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை(ii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்(iii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்(iv)    2024 ஆம் ஆண்டுக்கான கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்கும்(v)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய கல்வி ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vii)    2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 24(4) ஆம் பிரிவு மற்றும் 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு என்பவற்றின் பிரகாரம் 2026 மார்ச் 13 ஆம் திகதி முதல் 2026 யூன் 30 ஆம் திகதி வரை  “வீரமென்ட் நடைமுறையின் கீழ் செய்யப்பட்ட ஒதுக்கீடுகளின் பரிமாற்றங்கள்” தொடர்பான விவரங்கள் குறித்த அறிக்கை(viii)    2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.(ix)    2025 ஆம் ஆண்டுக்கான அப்போதைய நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் நகர அபிவிருத்தி பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(x)    2021/2022, 2022/2023 மற்றும் 2023/2024 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட கல்ஓயா பெருந்தோட்ட தனியார் கம்பனியின் வருடாந்த அறிக்கைகள்(xi)    2024 ஆம் ஆண்டுக்கான தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை(xii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை(xiii)    2024/2025 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை(xiv)    2025 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு ஊழியர் சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(xv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வடமேற்கு மாகாண சபை மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xvi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வடக்கு மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xvii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xviii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஊவா மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xix)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வடமேற்கு மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xx)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தென் மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xxi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சபரகமுவ மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xxii)    2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 17 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 48 ஆம் பிரிவின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டவையும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு, 2026 யூலை 16 ஆம் திகதிய 2497/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(xxiii)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஆண்டறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தற்காலிகத் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii)    ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஜகத் குணவர்தன                    (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக                    (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி                    (v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ ரவி கருணாநாயக்கஇலங்கையின் ஏற்றுமதிகள் மற்றும் முதலீட்டு வருமானம் அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்ஒலுவில் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் விபரங்கள் தொடர்பாக 2026.06.24 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ கே.காதர் மஸ்தான் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-(i)    நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்) - (218 ஆம் அத்தியாயமான) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்கானது(ii)    நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்) - (218 ஆம் அத்தியாயமான) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்கானதுஇன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க)சபையால் அங்கீகரிக்கப்பட்டன.ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை சமூக ஊடக தளங்களிலிருந்து பாதுகாத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1738 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 9ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks