02

E   |   සි   |  

2025-02-05

செய்தி வகைகள் : சபை அலுவல்கள் 

2025 பெப்ரவரி 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

2 : கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
•    2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும்;
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXXIX ஆம் பகுதியையும்;
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVIII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLVI மற்றும் XLVII ஆம் பகுதிகளையும்; மற்றும்
•    2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXIII மற்றும் XXXIV ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XIX மற்றும் XX ஆம் பகுதிகளையும்

(ii) 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 35(1) ஆம் பிரிவின் கீழ் கணக்காய்வாளர் தலைமையதிபதி மூலம் எனக்கு சமர்ப்பிக்கப்பட்ட  தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலை நிகழ்ச்சித் திட்டத்தை அச்சட்டத்தின் 35(3) ஆம் பிரிவின் கீழ்.
(iii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41எ (1) உறுப்புரையின் பிரகாரம் சனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பேரவையின் மூன்றாவது அறிக்கை.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2024.11.27 முதல் 2024.12.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு.
(ii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதித் துறைப் பிரிவொன்றை நிறுவுதல் தொடர்பில் அப்போதைய கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பவியல் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 நவம்பர் 29 ஆம் திகதிய 2412/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை.
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை.
(v)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் ஆண்டறிக்கை.
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைப்பணிப் பொருட்கள் சபையின் ஆண்டறிக்கை.
(vii)    2023 ஆம் ஆண்டுக்கான புனர்வாழ்வுப் பணியகத்தின் ஆண்டறிக்கை.
(viii)    2023 ஆம் ஆண்டுக்கான மீயுயர் நீதிமன்றங்களின் கட்டிடத் தொகுதி முகாமை சபையின் வருடாந்த அறிக்கை.
(ix)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(x)    2016 ஆம் ஆண்டுக்கான மத்திய கலாசார நிதியத்தின் ஆண்டறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் இரு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரவி கருணாநாயக்க     -    மூன்று மனுக்கள்                    
(ii)    கௌரவ ஹர்ஷன ராஜகருணா  -    மூன்று மனுக்கள்
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ ரீ.கே. ஜயசுந்தர
(ii)    கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க
(iii)    கௌரவ எஸ்.எம். மரிக்கார்
(iv)    கௌரவ ரவி கருணாநாயக்க


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா 

பாராளுமன்றத்திற்குச் செல்லும் வழியில் தன்னை தடுக்கின்ற காவல்துறையினர்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் கட்டளை
(ii)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்புப் பிரேரணை

“தேசிய சுகாதாரக் கொள்கை மூலம் சுகாதாரத் துறை பிரச்சினைகளைத் தீர்ப்பது” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ருவன் விஜேவீர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 பெப்ரவரி 6ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2026-10-09

2026 ஒக்டோபர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்2 : பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி விழாபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2024 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை(ii)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன்                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஜகத் குணவர்தன                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்இன நல்லிணக்கத்தையும் தேசிய பாதுகாப்பையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii)    கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்வட மாகாணத்திலும் மன்னாரிலும் தென்னைச் செய்கையில் 'வெள்ளை ஈ' தாக்கத்தின் விளைவு அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i)    ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திலிருந்து அகற்றப்பட்ட கற்களின் ஏற்றுமதி தொடர்பாக 2026.09.09 அன்று கௌரவ திலிப் வெதஆரச்சி அவர்களினால் பிரதம அமைச்சரிடம் வினவப்பட்ட வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.(ii)    சமீபத்திய எதிர்காலத்தில் எல் நினோ காலநிலையும் உணவுப் பாதுகாப்பும் தொடர்பான கூற்றொன்றினை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் முன்வைத்தார்.(iii)    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அரச நிறுவனங்களிலுள்ள உத்தியோகத்தர் பற்றாக்குறை தொடர்பாக 2026.09.25 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்களினால் எழுப்பிய வினாவுக்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1, 2, 4 மற்றும் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. 1, 4 மற்றும் 5 ஆம் விடயங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் 2 ஆம் இலக்க விடயம் குறிப்பிட்டவாறு நிறைவேற்றப்படவில்லை:-•    தியகம வனத்தைப் பாதுகாத்தல்கொழும்புக்கு அருகாமையில் எஞ்சியுள்ள கடைசி நகர்ப்புறத் தாழ்நில மழைக்காடுகளில் ஒன்றாகவும் நகரத்திற்கு மிக நெருக்கமான மழைக்காட்டுப் பகுதியாகவும்  தியகம வனம் காணப்படுவதனாலும்; பொல்கொட ஆற்றிற்கு நீர் வழங்கும் அதன் சதுப்பு நிலங்கள் மற்றும் நீரோடைகள் ஊடாக நீரோட்டத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இயற்கையான வெள்ளத் தடுப்பு அரணாக இது முக்கிய பங்கு வகித்து, அதன் மூலம் சுற்றியுள்ள சமூகங்களை வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாப்பதனாலும்; சிவப்பு தேவாங்கு, ஊதா முகக் குரங்கு மற்றும் கொடுபுலி போன்ற அழியும் அபாயத்திலுள்ள உயிரினங்கள் உட்பட 220 இற்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கினங்களுக்கு இந்த வனம் வாழ்விடமாக அமைந்திருப்பதனாலும்; சுமார் 12.6% நிலப்பரப்புக்குரிய தாவர இனங்களுக்கும் 11.58% நிலப்பரப்புக்குரிய விலங்கினங்களுக்கும் கடைசிப் புகலிடமாக விளங்கும் ஒரு முக்கியமான பல்லுயிர் மையமாக இது திகழ்வதுடன், இவற்றில் பல விலங்குகள் நகர்ப்புற விரிவாக்கத்தினால் அதிகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதனாலும்; தியகம வனம் அதன் தேவாங்கு இனங்களுக்காக சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதுடன் சுற்றுச்சூழல் - சுற்றுலாவுக்கான காத்திரமான சாத்தியத்தினைக் கொண்டிருப்பதனாலும்; உயிரியல் பல்வகைமை, காலநிலை மீண்டெழுந்தன்மை மற்றும் சமூகப் பாதுகாப்பைப் பேணுவதற்கு இந்த வனத்தைப் பாதுகாப்பது அவசியமானது என்பதனாலும்; தியகம வனத்தின் இழப்பானது ஈடுசெய்ய முடியாதது என்பதோடு, எதிர்கால சந்ததியினருக்காகவும் இலங்கையின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காகவும்; அதன் உடனடிப் பாதுகாப்பு கட்டாயமானது என்பதனாலும் இந்தப் பாராளுமன்றம் தியகம வனப்பகுதிக்குள் முன்னெடுக்கப்படும் அனைத்து காடழிப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் (FFPA) கீழ் அதனைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டுமெனவும், அதனை வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகார வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமெனவும், அத்துடன் எதிர்கால ஆக்கிரமிப்புகள் மற்றும் நிலைபேறற்ற அபிவிருத்திகளுக்கு எதிராகச் சாத்தியமான வலுவான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் இந்தப் பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.•    1983 ‘கறுப்பு ஜூலை’ யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், மேலும் இதுபோன்ற இன வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குமான விதப்புரைகளைச் செய்வதற்காக சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல்1983 ‘கறுப்பு ஜூலை’ மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளும், இன மோதல்களும், வன்முறைகளும் நாட்டின் தேசிய ஒருமைப்பாடு, சமூகக் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது மிக மோசமான வடுக்களை ஏற்படுத்தி உள்ளதாலும், மேற்படி மோதல்கள் மற்றும் வன்முறைகளினால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டதாலும், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் தீயிட்டு முழுமையாக அழிக்கப்பட்டதாலும், இச்சம்பவம் இடம்பெற்று 40 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள நிலையிலும் இந்த மோதல்களையும் வன்முறைச் சம்பவங்களையும் வழிநடத்தியவர்கள் அடையாளங்காணப்படவில்லை என்பதாலும், இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சொத்து சேதங்கள் குறித்து பரந்துபட்டதும் சுயாதீனமானதுமான விசாரணை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதாலும், இவ்வாறான இன மோதல்களும் வன்முறைகளும் இனியும் இந்த நாட்டில் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துதல் மற்றும் நாட்டின் சகல இனக்குழுமங்களுக்குமிடையே நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது இன்றியமையாததென்பதாலும், மேற்படி வன்முறைகள் குறித்த உண்மையை கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், மேலும் இதுபோன்ற இன வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குமான விதப்புரைகளைச் செய்வதற்காக சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென இந்த பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.•    நுண் நிதிக் கடன்களைப் பெற்று அக்கடன்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்காக வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்நுண் நிதிக் கடன்களைப் பெற்றுக் கொண்டவர்களுள் பெருமளவானவர்கள் தற்போது அக்கடன்களால் பாதிக்கப்பட்ட நபர்களாக இருப்பதனால், மேற்படி நபர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.•    இலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல்விளையாட்டு அமைப்புக்கள் இலங்கையில் பெருமளவில் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளன என்பது தெளிவாகப் புலப்படுவதன் காரணமாக, தோ்தலில் தேர்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் விளையாட்டு அமைப்புகளில் போட்டியிடுவதிலிருந்தும் தலைமைப் பதவிகளை வகிப்பதிலிருந்தும் தடை செய்யப்படுதல் வேண்டும் என இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“வலுச்சக்தி துறையை மறுசீரமைத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1633 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-10-08

2026 ஒக்டோபர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்2 : “ரெட்ஸோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் முதலாவது தொகுதியின் IV (4) மற்றும் V (5) ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் III (3) ஆம் பகுதியையும் மற்றும் ஐந்தாவது தொகுதியின் III (3) மற்றும் IV (4) ஆம் பகுதிகள்(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதி ─ மின்சார வாகனங்கள் பயன்பாடு, பயன்பாட்டிற்குப் பிந்திய முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் தாக்கம் தொடர்பான மதிப்பீடு – இலங்கை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கைபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தப்பட்டவாறான சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10அ ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 ஓகத்து 14 ஆம் திகதிய 2501/88 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(ii)    2025 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iii)    2025 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பிரனாந்து                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ ரவி கருணாநாயக்கசுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்துவதற்கான தேசிய உத்தி அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i)    ‘2018 முதல் 2026 வரையிலான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சுற்றுலா செயற்றிறன் தொடர்பான விபரங்கள்’ மற்றும் ‘இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை’ தொடர்பாக முறையே 2026.07.22 மற்றும் 2026.09.09 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாக்களுக்கு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் பதிலளித்தார்.(ii)    ‘சமூக, பொருளாதார மற்றும் நிதிப் பலன்கள் தொடர்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் மதிப்பீடு’ மற்றும் ‘இலங்கையின் ஏற்றுமதிகள் மற்றும் முதலீட்டு வருமானம்’ தொடர்பாக முறையே 2026.06.09 மற்றும் 2026.09.08 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாக்களுக்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சிஅதனையடுத்து, 1800 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-10-07

2026 ஒக்டோபர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல் 2 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─•    2019 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் ஒன்பதாவது தொகுதியின் XLV (45) ஆம் பகுதியையும்; •    2020 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாவது தொகுதியின் XXVIII (28) ஆம் பகுதியையும்; •    2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் இரண்டாவது தொகுதியின் LXVII (67) ஆம் பகுதியையும்; •    2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் இரண்டாவது தொகுதியின் LXXII (72)  மற்றும் LXXIII (73) ஆம் பகுதிகளையும்; •    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் ஒன்பதாவது தொகுதியின் XLIX (49) ஆம் பகுதியையும்; மற்றும்•    2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VI (6) மற்றும் VII (7) ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் VI (6) மற்றும் VII (7) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் II (2) மற்றும் III (3) ஆம் பகுதிகள்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2025 ஆம் ஆண்டுக்கான கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை(ii)    2025 ஆம் ஆண்டுக்கான கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iii)    2018/2019 ஆம் ஆண்டுக்கான தேசிய கடதாசிக் கம்பனியின் ஆண்டறிக்கை(iv)    2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை(v)    2023 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஆண்டறிக்கை(vi)    2025 ஆம் ஆண்டுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை(vii)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் படையணியின் வருடாந்த அறிக்கை(viii)    2025 ஆம் ஆண்டுக்கான தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(ix)    2025 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிறைக்கைதிகள் நலனோம்பல் நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி                    (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ஒஷானி உமங்கா(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன்(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிரி பண்டாரபாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சஜித் பிரேமதாசகூரை மீது சூரிய மின்சக்தி முறைமையின் புதிய ஒப்பந்தம் கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை குடிமகன் சிவராசா அனோஜன் கௌரவ வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் (i)    2027 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின் போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாட்டைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளின் மீதான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குரிய அல்லது அதன் கையாளுகையிலுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணங்கள் என்ற வகையாக கொடுப்பனவை இயலச் செய்வதற்கும்; திரட்டு நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக“ஒதுக்கீடு”எனும் சட்டமூலத்தினை கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.(ii)    இலங்கையினுள் ஆட்கள் உட்பிரவேசிப்பதனையும் இலங்கையிலிருந்து புறப்படுவதனையும் கட்டுப்படுத்துவதற்காகவும்; இலங்கைப் பிரசைகளல்லாத ஆட்கள் இலங்கையில் தங்கியிருப்பதனைக் கட்டுப்படுத்துவதற்காகவும்; பயண ஆவணங்களை வழங்குவதற்காகவும்; (351 ஆம் அத்தியாயமான) குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தையும் 1971 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, கடவுச்சீட்டு (ஒழுங்குபடுத்தல்) மற்றும் வெளிச்செல்கை அனுமதிப்பத்திரச் சட்டத்தையும் நீக்குவதற்காகவும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக“குடிவரவு”எனும் சட்டமூலத்தினை கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.ஒத்திவைப்புப் பிரேரணை“நெல் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கான திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1734 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 8ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-10-06

2026 ஒக்டோபர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சனாதிபதியின் செய்திகள்1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ. அவர்களால் எனக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட சிறப்புரிமை மீறல் தொடர்பான முறைப்பாடு தொடர்பான தீர்ப்பு2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல் 3 : அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர் 4 : அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் நான்காவது தொகுதியின் I (1) மற்றும் II (2) ஆம் பகுதிகளையும் மற்றும் ஐந்தாவது தொகுதியின் I (1) மற்றும் II (2) ஆம் பகுதிகள்(ii)    •    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXVI (66) ஆம் பகுதியையும்; மற்றும்•    2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் IV (4) மற்றும் V (5) ஆம் பகுதிகளையும் மற்றும் மூன்றாவது தொகுதியின் IV (4) மற்றும் V (5) ஆம் பகுதிகள்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்(ii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீதிச் சேவை ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iii)    2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.08.03 முதல் 2026.08.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மத்திய மாகாண சபையின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(v)    2024 ஆம் ஆண்டுக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் ஆண்டறிக்கை(vi)    2025 ஆம் ஆண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii)    ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே.வி. சமந்த வித்யாரத்ன                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி                    (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான்                    (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி                    (v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ சஜித் பிரேமதாசஇலங்கை மத்திய வங்கியின் 'இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் 2026' அறிக்கையைத் தயாரிப்பதில் காலாவதியான புள்ளிவிபரங்களைப் பயன்படுத்துதல் கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்வட மாகாண ஆளுநரால் நீதி நிருவாகத்தில் முறையற்ற தலையீடு தொடர்பாக 2026.06.12 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் (i)    இலங்கைக் கிரிக்கெட்டின் கட்டுப்பாட்டிற்காக, ஆளுகைக்காக, ஒழுங்குப்படுத்தலுக்காக, ஊக்குவிப்புக்காக, விருத்திக்காக மற்றும் நிருவாகத்துக்காக இலங்கைக் கிரிக்கெட்டினைத் தாபிப்பதற்காக ஏற்பாடு செய்வதற்கும்; நல்லாட்சி, நோ்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, வகைக் கூறவேண்டியமை, உள்ளடக்குந்தன்மை மற்றும் சமமான வாய்ப்புக்களை வழங்குதல் போன்ற கோட்பாடுகளினூடாக கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும்; எல்லாப் பங்கேற்பாளர்களினதும் நல்வாழ்வினைக் காப்பதற்கும் ஊழல் மற்றும் வேறு முறையற்ற நடத்தையிலிருந்து கிரிக்கெட்டினை பேணிக்காப்பதற்கும்;  இலங்கைக் கிரிக்கெட்டின் அமைத்துருவாக்கம், தத்துவங்கள் மற்றும் பணிகளுக்கு ஏற்பாடுசெய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக“இலங்கைக் கிரிக்கெட்”எனும் சட்டமூலத்தினை கௌரவ இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.(ii)    இலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியே புரியப்பட்ட பயங்கரவாதச் செயல்களிலிருந்தும், பயங்கரவாதத்துடன் இணைந்த வேறு தவறுகளிலிருந்தும் மற்றும் பயங்கரவாதம் என்ற தவறாகவமைகின்ற குறித்தசில குறித்துரைக்கப்பட்ட செயல்களிலிருந்தும் இலங்கையின் தேசிய பந்தோபஸ்தையும் இலங்கை மக்களையும் பாதுகாப்பதற்காகவும்; இலங்கைக்கு வெளியே பயங்கரவாதத்துக்காக ஆயத்தஞ்செய்வதற்கு இலங்கைக் குடியரசின் ஆள்புலத்தையும் அதன் மக்களையும் பயன்படுத்துவதனைத் தடுப்பதற்காகவும் ஏற்பாடுசெய்வதற்கும்; பயங்கரவாதச் செயலொன்றை அல்லது பயங்கரவாதத்துடன் இணைந்த வேறேதேனும் தவறைப் புரிந்துள்ள எவரேனுமாளைக் கண்டுபிடிப்பதற்காகவும், அடையாளங்காண்பதற்காகவும், பற்றுவதற்காகவும், கைதுசெய்வதற்காகவும், தடுத்துவைப்பதற்காகவும், புலனாய்வு செய்வதற்காகவும், அவருக்கெதிராகக் குற்றவழக்குத்தொடுப்பதற்காகவும் மற்றும் அவரைத் தண்டிப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும்; 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்குவதற்காகவும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான”எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(i)    வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்(ii)    வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் கட்டளை(iii)    பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் பிரேரணைஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“நைதெனியா காணியை தொழிற்பயிற்சி அதிகாரசபைக்கு மாற்றுதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ஒஷானி உமங்கா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1735 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 7ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks