பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
B : “இலங்கை வரைதல் தொழினுட்பவியலாளர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(iii) 2022 / 2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iv) 2023 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2022 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா எனர்ஜிஸ் (பிரைவேட்) நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(vi) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொலிஸின் செயலாற்றுகை அறிக்கை
(vii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள்
மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) சாதாரண தர பாடங்கள் தொடர்பான கல்வி சீர்திருத்தங்கள் பற்றி கல்வி அமைச்சர் கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.
(ii) நில்வலா ஆற்றின் குறுக்கே உப்பு தடுப்பணை அமைப்பது தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக 2024.07.23 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர், கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக தேசிய பாதுகாப்பு, அனைத்து மதங்கள் மற்றும் நாட்டின் கலாச்சாரம் மற்றும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தல்” தொடர்பாக ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1543 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூலை 25ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-09-24
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்கெளரவ ஹபீபு லெவ்வை முஹம்மது றிபான் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : கௌரவ சுகத் வசந்த த சில்வா, பா.உ. அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை(ii) 2023 ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை(iii) 2023 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா எனர்ஜிஸ் (பிரைவேட்) நிறுவனத்தின் ஆண்டறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம - மூன்று மனுக்கள் (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ ரவி கருணாநாயக்கஇலங்கை அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் (ii) கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் காணிப் பிரச்சினைஅமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்தேசிய எல் நினோ தயார்நிலை மற்றும் பதிலளிப்பு திட்டம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக 2026.08.04 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் நாய்களுக்குத் தடுப்பூசி ஏற்றுதல், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக நாய்களின் இனப்பெருக்கலை ஒழுங்குபடுத்துதல் என்பன மூலம் இலங்கையில் விசார்நாய்க்கடி நோயை ஒழிப்பதற்காகவும்; நாய்களைப் பதிவுசெய்வதற்காகவும்; தேசிய விசர்நாய்க்கடி நோய் ஒழிப்பு மதியுரைக் குழுவையும் பிராந்திய விசர்நாய்க்கடிநோய் ஒழிப்பு மதியுரைக் குழுக்களையும் தாபிப்பதற்காகவும்; (476 ஆம் அத்தியாயமான) விசர்நாய்க்கடி நோய்க் கட்டளைச் சட்டத்தையும் (477 ஆம் அத்தியாயமான) நாய்களைப் பதிவுசெய்தல் கட்டளைச்சட்டத்தையும் நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதற்காக“விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல்”எனும் சட்டமூலத்தினை கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.:-(i) அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடுஅதனையடுத்து, 1916 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-09-23
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்2 : கௌரவ டி.வீ. சானக, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட திறன் அபிவிருத்தி நிதியத்தின் ஆண்டறிக்கை(ii) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபையின் ஆண்டறிக்கை(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் அலுவலகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சபரகமுவ மாகாண சபையின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(v) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வனப் பாதுகாப்புத் திணைக்களம் (பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் 489) தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் (பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் 492) தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii) ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம - இரண்டு மனுக்கள் (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சஜித் பிரேமதாசநாட்டில் தித்வா பேரழிவிற்குப் பின்னரான முகாமைத்துவம் மற்றும் எல் நினோ நிலைமை (ii) கௌரவ ரவி கருணாநாயக்கமாதவணை பகுதியில் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களின் ஆக்கிரமிப்புஅமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் கடலில் எதிர்கொள்ளும் திருட்டு மற்றும் கடற்கொள்ளைக்கான தீர்வு தொடர்பாக 2026.07.10 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2இலக்க) பின்வரும் விடயங்கள் சபையில் அங்கீகரிக்கப்பட்டன.:-(i) ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் (ii) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 119 - நிகழ்ச்சித்திட்டம் 01ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர அதனையடுத்து, 1800 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 24ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-09-22
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்) " எனும் சட்டமூலங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்2 : “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்3 : “நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்) (L.D.O. 08/2026)” “நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்) (L.D.O. 11/2026)” எனும் சட்டமூலங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல் 4 : பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.எஸ் அப்துல் வாசித் அவர்களின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகின்றமை தொடர்பானது 5 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கையடக்கத் தொலைபேசி செயலி6 : பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து அறிக்கைகளையும் இலத்திரனியல் வடிவில் பெறுவது குறித்த ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் விருப்பத்தையும் கண்டறிதல் சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்A.(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் முதலாவது தொகுதியின் III (3) ஆம் பகுதி(ii) விவசாயத் திணைக்களத்தால் பராமரித்துச் செல்லப்பட்ட தற்போது மூடிவிடுவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ள ─• 7000/0/0/0285/0010 எனும் கணக்கு இலக்கத்தினைக் கொண்ட உருளைக்கிழங்கு செய்கை விரிவாக்கத் திட்ட முற்பணக் கணக்கு;• 7000/0/0/0999/0409 எனும் கணக்கு இலக்கத்தினைக் கொண்ட வெலிசர விவசாய வேலைத்தள தொழிற்பாட்டிற்கான முற்பணக் கணக்கு; • 7000/0/0/0999/0002 எனும் கணக்கு இலக்கத்தினைக் கொண்ட விவசாய பழுதுபார்ப்பு வேலைத்தளம் தொடர்பான முற்பணக் கணக்கு; மற்றும்• 7000/0/0/0285/0004 எனும் கணக்கு இலக்கத்தினைக் கொண்ட நாரஹேன்பிட்டி விவசாய தொழில்நுட்ப மத்திய பொருட் களஞ்சியம் தொடர்பான முற்பணக் கணக்குபோன்ற நான்கு முற்பணக் கணக்குகளுக்கான ரூ. 65,654,746.90 (அறுபத்தைந்து மில்லியன் அறுநூற்று ஐம்பத்து நான்காயிரத்து எழுநூற்று நாற்பத்தாறு ரூபா தொன்னூறு சதம்) தொழிற்பாட்டு நட்டங்கள் தொடர்பாக கணக்காய்வாளரின் அவதானிப்புகளை உள்ளடக்கிய அறிக்கையை, இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் நான் சமர்ப்பிக்கின்றேன்.B.இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —• 2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLVIII (48) ஆம் பகுதியையும்; • 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIX (59) ஆம் பகுதியையும்; • 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXIV (64) மற்றும் LXV (65) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLVIII (48) பகுதியையும்; மற்றும்• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் III (3) ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் III (3) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் I (1) பகுதிபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2023 ஆம் ஆண்டுக்கான நலன்புரி நன்மைகள் சபையின் வருடாந்த அறிக்கை(ii) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை இராணுவத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iii) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iv) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்கரை பாதுகாப்பு துறையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(v) 2026 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு(vi) 2022 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை.(vii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கைப் புகையிரதத் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(viii) 2019 ஆம் ஆண்டுக்கான எல்கடுவ பிளான்டேசன் லிமிடெட்டின் ஆண்டறிக்கை(ix) 2024 ஆம் ஆண்டுக்கான சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஆண்டறிக்கை(x) 2024 ஆம் ஆண்டுக்கான தேசியப் பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கை(xi) 2025 ஆம் ஆண்டுக்கான மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(xii) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை(xiii) 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஆண்டறிக்கை(xiv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i) வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அனுர கருணாதிலக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii) சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த விஜேபால (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பீ. ஆரியவங்ஷ (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சஜித் பிரேமதாசவேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முறையான வழிமுறை (ii) கௌரவ ரவி கருணாநாயக்கஇலங்கையை இந்து சமுத்திரத்தின் முதன்மையான கடல்சார் மறுஏற்றுமதி மற்றும் தளவாட மையமாக இலங்கை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i) சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பாக அரசாங்கத்தின் தலையீடு மற்றும் எடுக்கப்பட்டுள்ள இராஜதந்திர நடவடிக்கைகள் பற்றிய கூற்றொன்றினை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் முன்வைத்தார்.(ii) ஓய்வுபெற்ற முப்படைகளின் வீரர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் குறைகளுக்கான நிவாரணம் தொடர்பான சுற்றறிக்கை பற்றிய கூற்றொன்றினை பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் முன்வைத்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 3 இலக்க) பின்வரும் விடயங்கள் சபையில் அங்கீகரிக்கப்பட்டதுடன் (ii) ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது.:-(i) பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (ii) ரெட்ஸோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடுஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“சிறைச்சாலை அமைப்பின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1753 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 23ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-09-11
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2024 ஆம் ஆண்டுக்கான அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆண்டறிக்கை(ii) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை விமானப் படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iii) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 யூன் 18 ஆம் திகதிய 2493/36 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(iv) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 யூன் 18 ஆம் திகதிய 2493/37 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(v) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 யூன் 18 ஆம் திகதிய 2493/38 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(vi) 2025 ஆம் ஆண்டுக்கான கற்புல ஊனமுற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ ரணசிங்ஹ (iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான - இரண்டு மனுக்கள் (v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சஜித் பிரேமதாச‘அஸ்வெசும’ நலன்புரித்திட்டத்தில் உள்ள சிக்கல்கள் கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் துறைமுகங்கள் மற்றும் விமானத்துறை சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களின் விபரங்கள் அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i) நாட்டில் உருவாகி வரும் எல் நினோ (El Nino) வானிலை நிலைமை காரணமாக விவசாயத்தின் மீது ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றிய கூற்றொன்றினை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் முன்வைத்தார்.(ii) இலங்கையில் எல் நினோ நிலைமை தொடர்பான கூற்றொன்றினை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் முன்வைத்தார்.(iii) ‘செஸ் வரி மற்றும் உள்ளூர் தொழிற்சாலைகள் தொடர்பான பிரச்சினைகள்’ தொடர்பாக 2026.05.22 ஆம் திகதி, ‘செயற்படாத மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களால் அரசுக்குச் சொந்தமான வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு’ தொடர்பாக 2026.08.05 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரினால் எழுப்பிய வினாக்களுக்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுமாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2026 ஜனவரி மாதம் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2026 டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-• பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல்மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை ஒழுங்குபடுத்த வேண்டியிருப்பினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றை மேற்பார்வை செய்வதற்கு ஏற்புடைய சட்டங்கள் திருத்தப்படாத காரணத்தினால், 21 ஆண்டுகளுக்கும் அதிகமாக பெற்றோலியம் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்கள் ஒழுங்குபடுத்தப்படாமலிருக்கும் நிலையை மாற்றுவதற்காக ஏற்புடைய சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குதல்2018 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையின் வருடாந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக விழ்ச்சியடைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாலும் இதனால் எதிர்காலத்தில் இலங்கையில் இளைஞர் சனத்தொகை நிச்சயமாக வீழ்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உள்ளதாலும் இளைஞர் சனத்தொகை இவ்வாறு வீழ்ச்சியடையும்போது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறையில் பாதகமான தாக்கங்கள் ஏற்படக் கூடும் என்பதாலும் இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்ப அலகுகளை கவரக்கூடிய ஊக்குவிப்புத் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• பிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகையை அறவிடுவதை நிறுத்துதல்நவீன பாடசாலைக் கல்வி முறையைப் போன்றே பாரம்பரியக் கல்வி முறையான பிரிவென கல்வி முறையும் இலங்கையில் நடைமுறையிலுள்ள பிரதான கல்வி முறையாக காணப்படுவதாலும், நவீன பாடசாலைக் கல்வி முறையில் அதன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும் அங்கீகாரமும் பிரிவென கல்விக்கு அல்லது அதன் ஆசிரியர்கள் மற்றும் பிக்கு மாணவர்கள், பொதுநிலை மாணவர்கள் ஆகிய இரு தரப்புக்கும் உள்ளபடியே கிடைப்பதில்லை என்பதாலும், பிரிவென கல்வி தொடர்பில் ஒரு முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ள பிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகை அறிவிடுவதை 2026 ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 01ஆம் திகதியிலிருந்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• மலைப்பாங்கான பிரதேசங்களில் உணவுப் பயிர்களைப் பயிரிடுதல்2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இலங்கைக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ‘தித்வா சூறாவளி’ காரணமாக கேகாலை, கண்டி, மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் மலைசார்ந்த பிரதேசங்கள் பெருமளவில் மண்சரிவுக்கு உள்ளாகியிருப்பதாலும், தற்போது இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களில் குரங்கு, மந்தி, மர அணில் போன்ற வனவிலங்குகளால் பயிர்களுக்குச் சேதங்கள் ஏற்படுகின்றமையினாலும், இவ்வனவிலங்குகளின் உணவுத் தேவைக்காகவும், சுற்றாடல் சமநிலையைப் பாதுகாப்பதற்கும், மண்ணரிப்பைத் தடுப்பதற்கும், மேற்படி மண்சரிவுக்குள்ளாகியுள்ள மலைப்பாங்கான பிரதேசங்களில் பலா, மா, ஈரப்பலா, காட்டுமா போன்ற உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• கித்துள் கைத்தொழிற்றுறையை முன்னேற்றுதல்யுனெஸ்கோ அமைப்பு, இலங்கையின் கித்துள் வடித்தல் தொழில்நுட்பத்தினை உலக பாரம்பரியமாக பெயரிட்டுள்ளதனூடாக எமது நாட்டைப் பற்றிய கௌரவம் உலகத்தின் முன்னிலையில் உயர்ந்துள்ள காரணத்தினாலும், காலி, மாத்தறை, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, கம்பஹா உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களில் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் இந்த பாரம்பரிய கித்துள் சார்ந்த கைத்தொழிலைப் பாதுகாத்தவாறு சுமார் ஆயிரக்கணக்கான கைத்தொழிலாளர்கள் இத்தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ளமையினாலும், இந்தக் கைத்தொழிலை முன்னேறி வரும் சுற்றுலாத் துறையுடன் ஒன்றிணைப்பதற்கும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கிராமிய சாதாரண மக்களது பொருளாதார முன்னேற்றத்திற்கான புதியதொரு பாதையை அமைப்பதற்கும், கித்துள் கைத்தொழிற்றுறையின் நீண்டகால பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் பொருத்தமான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை நிறுவுதல்இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிற்சந்தைக்கான தேவைகளை நிவர்த்தி செய்யும் நவீன தொழில்நுட்ப பட்டதாரிகளை வழங்கும் பல்கலைக்கழகம் என்பதால், இலங்கையில் வளர்ச்சியடைந்து வரும் மருத்துவத்துறை உள்ளிட்ட உலகளாவிய தேவைகளையும் கருத்திற்கொண்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை நிறுவ வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரோிக்கின்றது.ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹகீம்(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர். எம். சமந்த ரனசிங்ஹ அதனையடுத்து, 1738 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.