பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-05-31
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இந்நாட்டில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தல், சங்கக் கூட்டுத்தாபனத்தின் வீழ்ச்சி மற்றும் இலங்கை வரலாற்றைத் திரிபுபடுத்துவதை தடுப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பது தொடர்பில் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வொன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயந்த சமரவீர தலைமையில் அண்மையில் (மே 22) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் வண. கலகம குசலதம்ம தேரர், வண. பாகொட ஜனிதவன்ஸ தேரர், வண. வாத்துவே தம்மவன்ஸ தேரர், ஒன்றியத்தின் உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) சன்ன ஜயசுமன, பேராசிரியர் சந்திம விஜேபண்டார, வைத்தியர் மனோஜ் குமார, வைத்தியர் வசந்த பண்டார, இசுறு உபநாத, சட்டத்தரணி கல்யாணத்த திரானகம, ஷகில ராஜகருணா, சாந்த குமார ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், மிஸ்ஸக கமலசிறி தேரர் சூம் தொழிநுட்பத்தின் ஊடாக அமெரிக்காவிலிருந்து இணைந்துகொண்டார்.
இது தொடர்பில் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவுறுத்தி இருந்தாலும் அது தொடர்பில் இதுவரை போதியளவு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என ஒன்றியத்தின் தலைவர் இங்கு தெரிவித்தார். அதனால் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தல், சங்கக் கூட்டுத்தாபனத்தின் வீழ்ச்சி மற்றும் இலங்கை வரலாற்றைத் திரிபுபடுத்துவதை தடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்துக்கு கொண்டுவருவது மற்றும் அது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பது தமது ஒன்றியத்தின் நோக்கமாகும் என கௌரவ சமரவீர சுட்டிக்காட்டினார்.
இங்கு பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தல், புத்தர் பற்றிய கட்டுக்கதைகளை பரப்புதல், தேரர்களை இழிவுபடுத்தும் விதத்தில் பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் குறித்து கலந்துகொண்டவர்கள் எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக விளக்கமளித்தனர். பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள் பெருமளவில் பிரபல்யப்படுத்தப்படுவதாகவும் கலந்துகொண்ட தேரர்கள் சுட்டிக்காட்டினர்.
இவ்வாறு திரிபுபடுத்தப்பட்ட தகவல்களைக் கொண்ட புத்தகங்களை பிரபல்யப்படுத்துவதால் பௌத்த தர்மம் பற்றிய தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவி வருவதாகவும் தேரர்கள் சுட்டிக்காட்டினர். இதனால் துறவறம், துறவற உபசம்பதா மற்றும் சடங்குகள் போன்ற காலாகாலமாக பேணப்பட்டு வந்த எண்ணக்கருக்கள் தொடர்பில் அதிருப்தி ஏற்படும் வகையில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதனால் புத்தரை கற்பனையாக மக்கள் மத்தியில் நம்பவைத்து பௌத்த தர்மம் மீதான நம்பிக்கையை சிதைப்பது மேற்கொள்ளப்படுவதாக தேரர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கு மேலதிகமாக, பௌத்த தர்மம், புத்தரை இழிவுபடுத்தும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் தரப்பினர் உளநாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு பாரியளவு பணபலத்தைப் பயன்படுத்தி இந்த செயற்பாட்டை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். இது சர்வதேச புவி அரசியலில் இலங்கையை வீழ்த்தும் சூழ்ச்சியொன்றின் வடிவமாக இருக்க முடியும் என்பதால், இதனை முழுவதுமாகக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டினர். இதனால் சமூக வன்முறை மற்றும் கலாசார வீழ்ச்சி ஏற்படுவதுடன், அதனால் இந்நாட்டின் தனி நபர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் மற்றும் இறுதியில் முழு சமூகமும் வீழ்ச்சியடைய முடியும் என்பதால் இது தொடர்பில் விரைவாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகளை திருத்துதல், இலங்கையின் ஒருமித்த அடிப்படைக்கு தாக்கம் செலுத்தும் வரலாற்று ரீதியான மூலாதாரங்களை திரிபுபடுத்துவதைத் தடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிடுகையில், முன்வைக்கப்பட்ட முமொழிவுகள் மற்றும் கருத்துக்களை ஒன்று சேர்த்து பௌத்த மதத்தை திரிபுபடுத்தல், புத்தர் தொடர்பில் கட்டுக்கதைகளை பரப்புதல் மற்றும் பிக்குகளை இழிவுபடுத்தும் பிரச்சாரங்களை தடுத்தல் தொடர்பில் தேவையான பரிந்துரைகளை ஒன்றியத்தின் மூலம் முன்வைக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



