பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-09-20
செய்தி வகைகள் : குழு செய்திகள்
மத்திய வங்கி நிதி வங்குரோத்து நிலையை அறிவித்ததனால் முழு நாடும் தோல்வியடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அண்மையில் (செப். 15) பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துக்களைப் பெறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் 2022 செப்டம்பர் 01 மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வினவப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த வஜிர அபேவர்தன குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் பிரகாரம் நிதிக் கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்குக் காணப்படுவதாகவும் பிழையான முறையொன்றுக்கு அமைய 202.04.12 ஆம் திகதி மத்திய வங்கியினால் இந்நாட்டில் நிதி வங்குரோத்து நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். இதனால் முழு நாடும் அசௌகரியத்துக்குட்பட்டதாக அவர் தெரிவித்தார்.
விசேடமாக 2022 இல் முதலாவது காலாண்டில் 3.9 பில்லியன் டொலர் செலுத்த வேண்டி இருந்ததாகவும், 2022 ஏப்ரல் 08 இல் 3.2 பில்லியன் டொலர் செலுத்தியிருந்ததுடன் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார். அதற்கமைய, ஏப்ரல் 12 வரை சுமார் 70 மில்லியன் டொலர் சீனாவுக்கு செலுத்தவேண்டி இருந்ததாகவும், இந்த நிலையில், ஏப்ரல் 12 இல் எந்தவொரு விபரமும் இல்லாமல் மத்திய வங்கியினால் நிதி வங்குரோத்து நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இது பிழையான செயற்பாடு எனவும், இது நடந்திருக்கக் கூடாது எனவும், அந்த நிலையில் தனியாரின் உதவியுடன் அந்தக் கடனை செலுத்த முடியுமாக இருந்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இதனால், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்திய வங்கியின் அதிகளவான அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஒரு சிலர் இந்த நிலையில் இலங்கைக்கு சார்பாக இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதனால், இலங்கையின் சார்பாக இருப்பவர்களை உயர் பதவிகளில் அமரவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
தற்போதைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 2022 ஏப்ரல் 08 இல் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட கருத்தை இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன் அண்மையில் முன்வைக்கப்பட்ட மத்திய வங்கி சட்டத்துக்கு உயர் நீதிமன்றத்தினால் சுமார் 70 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டமை தொடர்பிலும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிடுகையில், நிதி வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியமை, நீண்ட காலமாக ஒரு சில குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சின் விளைவு எனத் தெரிவித்தார். புதிய மத்திய வங்கி ஆளுநர் பதவியேற்று முதலாவது தினத்திலே வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இது எந்தவொரு தேசிய அல்லது நிறுவன ரீதியான கலந்துரையாடல் இன்றி மேற்கொள்ளப்பட்ட கடன் மீள செலுத்துவதை கைவிடுவதன் அறிவிப்பாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
விசேடமாக, இதன்போது அஜித் நிவாட் கப்ரால் 3 முக்கிய விடயங்கள் பற்றி குறிப்பிட எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய, 2022 ஏப்ரல் 12 இல் நிதி வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியமை, வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்ற விதம் மற்றும் ரூபாவின் பெறுமதியின் வீழ்ச்சியடைதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன் போது 2022 ஏப்ரல் 12 இல் நிதி வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியமை நிகழ்ந்த விதத்தை அஜித் நிவாட் கப்ரால் விரிவாக விளக்கியத்துடன் நேரம் போதாமை காரணமாக எதிர்வரும் தினத்தில் ஏனைய இரண்டு விடயங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்க அதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் கடினமான சூழ்நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் தப்பியோடியதாக கருத்தொன்று காணப்படுவதாகவும் அது தொடர்பில் பதிலளிப்பது முக்கியமானது என இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் கௌரவ சாகர காரியவசம் தெரிவித்தார். இதன்போது அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிடுகையில், 2022.04.03 ஆம் திகதி அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் கூடி அமைச்சரவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்ததாகவும், இந்த சந்தர்ப்பத்திற்கு தன்னையும் அழைத்திருந்ததால் தனக்கும் அந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு ஏற்பட்டதாகத் தெரிவித்தார். எனினும் இதன்போது தப்பியோடுவது இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை இடம்பெறாமல் இருப்பதற்கு இந்த விடயம் தொடர்பில் புரிதல் இருப்பது முக்கியமானது என குழுவின் தலைவர் கௌரவ சாகர காரியவசம் தெரிவித்தார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எஸ்.பி. திசாநாயக்க, கௌரவ ஜயந்த கெடகொட, கௌரவ (மேஜர்) பிரதீப் உந்துகொட, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

