E   |   සි   |  

2022-11-10

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோப் குழு பணிப்பு

2022-2025 காலப் பகுதியில் நுரைச்சோலை லக் விஜய அனல்மின்னுற்பத்தி நிலையத்துக்காக நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு பணிப்புரை விடுத்துள்ளது.

நிலக்கரி கொள்வனவு செய்ய கேள்விப்பத்திரம் கோரும்போது காணப்பட்ட விசேடமான நிலைமைகள் குறித்து கோப் குழு கலந்துரையாடியதுடன், வருகை தந்திருந்த அதிகாரிகள் முன்வைத்த கருத்துக்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில் கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்த கொள்முதல் செயல்முறையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன், இவ்விடயங்கள் குறித்த முழுமையான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அத்துடன், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சட்டரீதியாக ஒப்பந்தம் செய்துகொள்வது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கவனத்தில் கொண்டு, கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே நடைமுறைப்படுத்துமாறும் கோப் குழுவினால் பணிப்புரை வழங்கப்பட்டது.

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் நேற்றுக் (நவ. 09) கூடியபோது, 2022-2025 காலப் பகுதியில் நுரைச்சோலை லக் விஜய அனல்மின்னுற்பத்தி நிலையத்துக்காக நிலக்கரி கொள்வனவு செய்யும் கொள்முதல் நடைமுறைகளை மதிப்பீடு செய்வது தொடர்பில் 2022 செப்டெம்பர் 30ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட அறிக்கை குறித்து ஆராய்ந்தபோதே  இப்பணிப்புரை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர், கொள்முதல் குழுவின் தலைவர், இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கமைய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் எதிர்காலத்தில் நடைமுறைப்படத்த வேண்டிய 08 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

  1.  நிலக்கரி பெறுகை நடைமுறை தொடர்பில் அனைத்து தரப்பினரும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட பெறுகை நடைமுறைக்கு இணங்க தனது பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றியுள்ளதாக உறுதிப்படுத்துதல் மற்றும் அந்த நிலைமையிலிருந்து விலகும் தரப்பினருக்கு எதிராக பொருத்தமான மேலதிக நடவடிக்கை எடுப்பதற்குரிய தேவைப்பாடு வலியுறுத்தப்படுகின்றது.
  2.  வழிகாட்டிக் கோவை 1.2 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் மற்றும் வழங்குனர்களின் நிதி இயலுமை, அனுபவம், வழங்கலின் தரம், போதிய சட்ட கடப்பாடுகள் உள்ளடங்கலாக அடிப்படைத் தேவைப்பாடுகளை பாதுகாக்கும் வகையில் விலைக்கேள்வியாளர்களை பதிவு செய்யும் நடைமுறை ஏற்றுக் கொள்ளக்கூடிய மட்டத்தில் தளர்வாக்கப்பட்டு போட்டித் தன்மையை அதிகரித்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
  3.  விலைக்கேள்வி ஆவணங்களுக்கு திருத்தங்களை மேற்கொள்ளும் போது குறித்த சான்றுப்படுத்தல்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் அவ்வாறான திருத்தங்களின் சட்டரீதியான தன்மையை சான்றுப்படுத்திய பின்னர் அவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த திருத்தங்களுக்கு பொருந்தும் வகையில் விலைக்கேள்வி ஆவணங்களில் ஏனைய பிரிவுகள் மற்றும் உடன்படிக்கை திருத்தங்கள் மேற்கொள்ள பொறுப்புடன் செயற்பட வேண்டும். விலைக்கேள்வி ஆவணங்களுக்கு விலைக்கேள்வி கோரப்பட்டதன் பின்னர் முக்கியமான திருத்தங்களை மேற்கொள்வதை இயலுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் தவிர்த்தல் வேண்டும். விலைக்கேள்வி ஆவணங்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் திருத்தங்களில் அந்த திருத்தங்களை பின்பற்றுவதற்கு அனைத்து விலைக்கேள்வியாளர்களுக்கும் நியாயமான காலமொன்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  4.  நிலக்கரி பெறுகையில் வழிகாட்டிக் கோவையின் பிரகாரம் தயாரிக்கப்பட வேண்டிய பெறுiகைகள் திட்டம் முழுமையாகவும் முறையானதாகவும் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு அதற்கிணங்க நடவடிக்கை எடுக்க வேண்டியமை மற்றும் உரிய காலத்தில் நிலக்கரி விநியோகத்தினை உறுதிப்படுத்தும் வகையில் நிதிஏற்பாடு 73 தொடர்பில் முன் இணக்கப்பாட்டொன்றினை பெற்றுக் கொள்ளும் இயலுமை தொடர்பில் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
  5.  அவ்வாறு வழங்குனருக்கு அதிக எண்ணிக்கையில் கூட்டுத்தொகையை பெறுகைக்காக நடவடிக்கை எடுக்கப்படும் எனில் அந்த கூட்டுத்தொகைக்கு சட்ட ஆளுமை உள்ளமை தொடர்பில் சான்றுப்படுத்த வேண்டியதுடன் அதற்கு காணப்பட வேண்டிய இயலுமைகள் மற்றும் சட்ட தொடர்புகள் சிறந்த முறையில் உறுதிப்படுத்தப்படும் வகையில் விலைக்கேள்வி ஆவணங்கள் மற்றும் உடன்படிக்கைகளை வலுப்படுத்தி தரமான நிலக்கரி இருப்பினை உரிய காலத்தில் பெற்றுக்கொள்வதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  6.  நிலக்கரி பெறுகைக்குரிய ஒருங்கிணைந்த குறிகாட்டியினை தீர்மானிக்கும் போது உச்ச பொருளாதா நலன் அரசாங்கத்திற்கு கிட்டும் வகையில் அந்த குறிகாட்டியை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் வலய குறிகாட்டி தொடர்பில் காலஅடிப்படையில் மீள கவனத்தில் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  7.  2022 செப்தெம்பர் 22 ஆந் திகதி அமைச்சரவை தீர்மானத்தில் திறந்த சர்வதேச கேள்வி நடைமுறையை பின்பற்றி மற்றும் தற்போது பதிவு செய்துள்ள வழங்குனர்களுக்கு பெறுகையில் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் பெறுகை நடைமுறையை ஆரம்பிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. திறந்த சர்வதேச கேள்வி நடைமுறையை ஆரம்பிக்கும் போது நிலக்கரி கம்பனியினால் தற்போது வழங்குனராக தற்போது பதிவு செய்யும் போது நிதி மற்றும் தொழில்நுட்ப இயலுமையை மதிப்பீட்டிற்கு உள்ளாக்கும் ஆகக்குறைந்த அடிப்படைத் தகைமைகள் விலைக்கேள்வி ஆவணங்களின் விலைக்கேள்வியாளர்களை மதிப்பீடு செய்யும் அளவீடுகளாக உள்ளடக்கப்பட வேண்டும் என்பது பரிந்துரைக்கப்படுகின்றது.
  8.  இந்தப் பெறுகைக்குரிய மிகவும் உயர்ந்த அங்கீகாரங்களைப் பெற்றுக்கொள்ள இயல்பான வகையில் அவசியமான கற்கைகளை மேற்கொள்வதற்கும், தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் போதிய காலம் அமைச்சரவைக்குக் கிடைக்கும் வகையில் சரியான தகவல்களை தாமதமின்றி சமர்ப்பிப்பதற்கு உரிய உத்தியோகத்தர்களுக்கு கட்டளையிடல்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஸ்பகுமார, கௌரவ ஜானக வக்கம்புர, கௌரவ இந்திக அனுருத்த, கௌரவ டி.வி. சானக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ நிமல் லான்சா, கௌரவ நளீன் பண்டார ஜயமகா, கௌரவ எஸ். எம். மரிக்கார், கௌரவ மஜிபுர் ரஹ்மான், கெளரவ ரோஹினி விஜேரத்ன, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத் குமார சுமித்ராராச்சி, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ ராஜிகா விக்கிரமசிங்க, கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

3

 



தொடர்புடைய செய்திகள்

2026-11-18

கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தின் நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாண வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்துவதற்கான பொறிமுறையைத் தயாரிப்பது தொடர்பில் கோபா உபகுழுவில் அவதானம்

கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட கூட்டுறவுத் துறையில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்வதற்கான உபகுழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடியின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தின் முகாமைத்துவத்தின் பலவீனங்கள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், உரிய அனுமதியின்றி சங்கத்தின் நிதி தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த முதலீடுகள் காரணமாக உறுப்பினர்கள் மற்றும் வெளிப்புற வைப்பாளர்களின் வைப்புப் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது.மேலும், கூட்டுறவுத் திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள், சங்கத்தின் சொத்துக்களைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல்கள், நீதிமன்றத் தடையுத்தரவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்காக, சங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மதிப்பீடு செய்து அவற்றை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், சொத்துக்களை அகற்றுவதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவுகளை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தற்போது கையிருப்பில் உள்ள நிதியை வைப்பாளர்களிடையே நியாயமான அடிப்படையில் பகிர்ந்தளித்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்படாத முதலீடுகளை மேற்கொண்டமைக்குப் பொறுப்பான முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடமிருந்து அதற்கான நட்டஈட்டுத் தொகையை அறவிடுதல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிறைவு செய்யப்படாத திட்டங்களைப் பூர்த்தி செய்து அவற்றின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் முழு வைப்புத் தொகையையும் மீளச் செலுத்துவதற்கான தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான பொறிமுறையொன்றை முன்வைக்க வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அத்துடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மேல் மாகாண மற்றும் கம்பஹா மாவட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டது.இந்தக் கூட்டத்தில் உபகுழுவின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, டீ. கே. ஜயசுந்தர மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-11-17

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பல முக்கிய நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயம்

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் பல நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டது.இதற்கமைய, குழுவினர் இன்று (நவ. 17) இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனம் (SINTEC) மற்றும் இலங்கை உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) ஆகிய நிறுவனங்களுக்கு விஜயம் செய்து அவற்றின் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.2025/2026 ஆம் ஆண்டுகளுக்கான குறித்த நிறுவனங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல், 2027 ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டுத் திட்டத்தைப் பரிசீலித்தல் மற்றும் நிறுவன வளாகங்களில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அவதானித்தல் ஆகியன இந்த விஜயத்தின் நோக்கங்களாகும்.குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தனுர திசாநாயக்க, லசித் பாஷண கமகே மற்றும் சதுர கலப்பத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-11-17

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் மற்றும் சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உபகுழுவில் தொடர்ந்தும் கலந்துரையாடல்

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில், கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவில் மேலும் கலந்துரையாடப்பட்டது.குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இக்கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.ஆசிரியர் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள அதிகரிப்பு இடைவெளிகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஒரு சேவைக்கு மாத்திரம் தனித்தனியாக சம்பளத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் ஒப்பிடுகையில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.சேவைப் பிரமாணக் குறிப்புகள் மற்றும் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லைகளைத் திருத்துதல், அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள், பாடசாலை வகைப்படுத்தல் மற்றும் வெற்றிடங்களை நிரப்புதல், முறையான இடமாற்றக் கொள்கை, ஆசிரியர் மற்றும் அதிபர் உத்தியோகபூர்வ இல்லங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் உபகுழு விரிவாகக் கலந்துரையாடியது.இவ்விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடிய பின்னர், முன்மொழிவுகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் அத்தம்பாவ, சுகத் வசந்த. டி சில்வா, சுஜீவ திசாநாயக்க மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-11-16

யானை – மனித மோதலைக் குறைத்தல் மற்றும் யானைகளைப் பாதுகாப்பது தொடர்பில் புதிய தொழில்நுட்ப, நடைமுறைத் தீர்வுகளைக் கண்டறிவது குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.இதில், யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துதல், காட்டு யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிதல் மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்குப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.யானைகளின் வாழ்விடங்கள் இழக்கப்படுதல், பாரம்பரிய யானை வழித்தடங்கள் தடைப்படுதல் மற்றும் குடியிருப்புகள், விவசாய நிலங்களை அண்மித்த பகுதிகளில் உணவு தேடிச் செல்லுதல் ஆகியன யானை – மனித மோதல் அதிகரிப்பதற்கான பிரதான காரணங்களாக இதன்போது கலந்துரையாடப்பட்டன. யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிவதற்காக GPS மற்றும் செய்மதிக் கழுத்துப்பட்டித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.யானை – மனித மோதலைக் குறைப்பதற்காக பிரதேச மட்டத்தில் வனவிலங்கு அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்களை உள்ளடக்கிய கூட்டுக் குழுக்களை அமைத்தல், சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துதல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைத் தொடர்பாடல் வலையமைப்புகளைச் செயற்படுத்துதல் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.அத்துடன், நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த யானைகளுக்குச் சிகிச்சையளிக்கும்போது வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை மருத்துவ அதிகாரிகளின் சேவை, யானைகளுக்கு மயக்க மருந்து செலுத்தும்போது காணப்படும் ஆபத்துகள் மற்றும் களத்தில் சிகிச்சையளிப்பதற்குத் தேவையான நடமாடும் மருத்துவ வசதிகள், நடமாடும் எக்ஸ்-ரே இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்ப உபகரணங்களின் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், உபுல் கித்சிறி, சட்டத்தரணி எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, சுதத் பலகல்ல, கிட்ணன் செல்வராஜ் மற்றும் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks