02

E   |   සි   |  

2022-07-16

செய்தி வகைகள் : சபை அலுவல்கள் 

2022 ஜூலை 16ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

“கௌரவ உறுப்பினர்களே, அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அரசியலமைப்பின் 38(1)(ஆ) உறுப்புரையின் பிரகாரம்,  2022 யூலை 14 ஆம் திகதி முதல் நடைமுறைக்குவருமாறு சனாதிபதிப் பதவியினை இராஜினாமாச் செய்திருப்பதனால், அது பற்றிய அறிவித்தல்கள் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தினால் இப்போது சபையில் சமர்ப்பிக்கப்படும்”

(i) 2022, ஜூலை 16 ஆந் திகதி சனிக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுதல்
(ii) அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இராஜினாமாக் கடிதம்
(iii) வேட்புமனு தாக்கல் 2022 ஜூலை 19 ஆம் திகதியன்று


அதனையடுத்து, 1013 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜூலை 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2026-09-25

2026 செப்டம்பர் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2024 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை(ii)    2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை நிலை வணிகம் தொடர்பில் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அனுமதியைப் பின்பற்றி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 ஏப்பிறல் 10 ஆம் திகதிய 2483/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(iii)    2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் இரண்டாம் நிலை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகம் தொடர்பில் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அனுமதியைப் பின்பற்றி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 ஏப்பிறல் 10 ஆம் திகதிய 2483/18 இலிருந்து 2483/85 வரையிலான இலக்கங்களைக் கொண்ட 68 அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்(iv)    2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மைநிலை வணிகம் தொடர்பில் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அனுமதியைப் பின்பற்றி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 மே 11 ஆம் திகதிய 2488/03 மற்றும் 2488/04 ஆம் இலக்கங்களிலான அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்(v)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vi)    2025 ஆம் ஆண்டுக்கான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன                    (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார                    (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி அனுஸ்கா திலகரத்ன                    (v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ கே.காதர் மஸ்தான்வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அரச நிறுவனங்களிலுள்ள உத்தியோகத்தர் பற்றாக்குறை(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிதி மற்றும் ஏனைய பிரச்சினைகள்சிறப்புரிமைகள்பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டி.வீ. சானக அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2026 செப்தெம்பர் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.:-(i)    அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம் - திருத்தங்களுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது (ஆதரவாக 158; எதிராக 63)(ii)    நீதித்துறை (திருத்தம்) - வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 158; எதிராக 62) பின்னர் சபையால் நிறைவேற்றப்பட்டதுஅதனையடுத்து, 2015 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


2026-09-24

2026 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்கெளரவ ஹபீபு லெவ்வை முஹம்மது றிபான் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : கௌரவ சுகத் வசந்த த சில்வா, பா.உ. அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை(ii)    2023 ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை(iii)    2023 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா எனர்ஜிஸ் (பிரைவேட்) நிறுவனத்தின் ஆண்டறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம - மூன்று மனுக்கள்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ ரவி கருணாநாயக்கஇலங்கை அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் (ii)    கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் காணிப் பிரச்சினைஅமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்தேசிய எல் நினோ தயார்நிலை மற்றும் பதிலளிப்பு திட்டம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக 2026.08.04 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் நாய்களுக்குத் தடுப்பூசி ஏற்றுதல், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக நாய்களின் இனப்பெருக்கலை ஒழுங்குபடுத்துதல் என்பன மூலம் இலங்கையில் விசார்நாய்க்கடி நோயை ஒழிப்பதற்காகவும்; நாய்களைப் பதிவுசெய்வதற்காகவும்; தேசிய விசர்நாய்க்கடி நோய் ஒழிப்பு மதியுரைக் குழுவையும் பிராந்திய விசர்நாய்க்கடிநோய் ஒழிப்பு மதியுரைக் குழுக்களையும் தாபிப்பதற்காகவும்; (476 ஆம் அத்தியாயமான) விசர்நாய்க்கடி நோய்க் கட்டளைச் சட்டத்தையும் (477 ஆம் அத்தியாயமான) நாய்களைப் பதிவுசெய்தல் கட்டளைச்சட்டத்தையும் நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதற்காக“விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல்”எனும் சட்டமூலத்தினை கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.:-(i)    அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு  (ii)    நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடுஅதனையடுத்து, 1916 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-09-23

2026 செப்டம்பர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்2 : கௌரவ டி.வீ. சானக, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட திறன் அபிவிருத்தி நிதியத்தின் ஆண்டறிக்கை(ii)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபையின் ஆண்டறிக்கை(iii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் அலுவலகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சபரகமுவ மாகாண சபையின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(v)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வனப் பாதுகாப்புத் திணைக்களம் (பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் 489) தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் (பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் 492) தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii)    ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம - இரண்டு மனுக்கள்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சஜித் பிரேமதாசநாட்டில் தித்வா பேரழிவிற்குப் பின்னரான முகாமைத்துவம் மற்றும் எல் நினோ நிலைமை (ii)    கௌரவ ரவி கருணாநாயக்கமாதவணை பகுதியில் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களின் ஆக்கிரமிப்புஅமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் கடலில் எதிர்கொள்ளும் திருட்டு மற்றும் கடற்கொள்ளைக்கான தீர்வு தொடர்பாக 2026.07.10 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2இலக்க) பின்வரும் விடயங்கள் சபையில் அங்கீகரிக்கப்பட்டன.:-(i)    ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம்  (ii)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 119 - நிகழ்ச்சித்திட்டம் 01ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர  அதனையடுத்து, 1800 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 24ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-09-22

2026 செப்டம்பர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்) " எனும் சட்டமூலங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்2 : “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்3 : “நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்) (L.D.O. 08/2026)” “நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்) (L.D.O. 11/2026)” எனும் சட்டமூலங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல் 4 : பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.எஸ் அப்துல் வாசித் அவர்களின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகின்றமை தொடர்பானது 5 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கையடக்கத் தொலைபேசி செயலி6 : பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து அறிக்கைகளையும் இலத்திரனியல் வடிவில் பெறுவது குறித்த ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் விருப்பத்தையும் கண்டறிதல் சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்A.(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் முதலாவது தொகுதியின் III (3) ஆம் பகுதி(ii)    விவசாயத் திணைக்களத்தால் பராமரித்துச் செல்லப்பட்ட தற்போது மூடிவிடுவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ள  ─•    7000/0/0/0285/0010 எனும் கணக்கு இலக்கத்தினைக் கொண்ட உருளைக்கிழங்கு செய்கை விரிவாக்கத் திட்ட முற்பணக் கணக்கு;•    7000/0/0/0999/0409 எனும் கணக்கு இலக்கத்தினைக் கொண்ட வெலிசர விவசாய வேலைத்தள தொழிற்பாட்டிற்கான முற்பணக் கணக்கு; •    7000/0/0/0999/0002 எனும் கணக்கு இலக்கத்தினைக் கொண்ட விவசாய பழுதுபார்ப்பு வேலைத்தளம் தொடர்பான முற்பணக் கணக்கு; மற்றும்•    7000/0/0/0285/0004 எனும் கணக்கு இலக்கத்தினைக் கொண்ட நாரஹேன்பிட்டி விவசாய தொழில்நுட்ப மத்திய பொருட் களஞ்சியம் தொடர்பான முற்பணக் கணக்குபோன்ற நான்கு முற்பணக் கணக்குகளுக்கான ரூ. 65,654,746.90 (அறுபத்தைந்து மில்லியன் அறுநூற்று ஐம்பத்து நான்காயிரத்து எழுநூற்று நாற்பத்தாறு ரூபா தொன்னூறு சதம்) தொழிற்பாட்டு நட்டங்கள் தொடர்பாக கணக்காய்வாளரின் அவதானிப்புகளை உள்ளடக்கிய அறிக்கையை, இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் நான் சமர்ப்பிக்கின்றேன்.B.இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —•    2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLVIII (48) ஆம் பகுதியையும்;  •    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIX (59)  ஆம் பகுதியையும்; •    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXIV (64) மற்றும் LXV (65) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLVIII (48) பகுதியையும்; மற்றும்•    2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் III (3) ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் III (3) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் I (1) பகுதிபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2023 ஆம் ஆண்டுக்கான நலன்புரி நன்மைகள் சபையின் வருடாந்த அறிக்கை(ii)    2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை இராணுவத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iii)    2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iv)    2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்கரை பாதுகாப்பு துறையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(v)    2026 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு(vi)    2022 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை.(vii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கைப் புகையிரதத் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(viii)    2019 ஆம் ஆண்டுக்கான எல்கடுவ பிளான்டேசன் லிமிடெட்டின் ஆண்டறிக்கை(ix)    2024 ஆம் ஆண்டுக்கான சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஆண்டறிக்கை(x)    2024 ஆம் ஆண்டுக்கான தேசியப் பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கை(xi)    2025 ஆம் ஆண்டுக்கான மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(xii)    2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை(xiii)    2024 ஆம் ஆண்டுக்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஆண்டறிக்கை(xiv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i)    வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அனுர கருணாதிலக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii)    சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த விஜேபால                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பீ. ஆரியவங்ஷ                    (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சஜித் பிரேமதாசவேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முறையான வழிமுறை (ii)    கௌரவ ரவி கருணாநாயக்கஇலங்கையை இந்து சமுத்திரத்தின் முதன்மையான கடல்சார் மறுஏற்றுமதி மற்றும் தளவாட மையமாக இலங்கை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i)    சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பாக அரசாங்கத்தின் தலையீடு மற்றும் எடுக்கப்பட்டுள்ள இராஜதந்திர நடவடிக்கைகள் பற்றிய கூற்றொன்றினை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் முன்வைத்தார்.(ii)    ஓய்வுபெற்ற முப்படைகளின் வீரர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் குறைகளுக்கான நிவாரணம் தொடர்பான சுற்றறிக்கை பற்றிய கூற்றொன்றினை பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் முன்வைத்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 3 இலக்க) பின்வரும் விடயங்கள் சபையில் அங்கீகரிக்கப்பட்டதுடன் (ii) ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது.:-(i)    பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்  (ii)    ரெட்ஸோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடுஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“சிறைச்சாலை அமைப்பின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1753 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 23ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks