இலங்கையின் முன்னாள் பிரதமர் ஒருவரான ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் கௌரவ மஹிந்த யப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (23) உறுதியுரை எடுத்தார்.
அதனை அடுத்து அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க முன்னிலையில் உறுப்பினர்களின் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.
1977 இல் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் தெரிவான விக்ரமசிங்க அவர்கள் 08 வது பாராளுமன்றம் வரை தொடர்ந்து 42 வருடங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகளவு தடவை பிரதமராக பதவி வகித்துள்ளதுடன், கபினட் அமைச்சுப் பதவி, சபை முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.
73 வயதான ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக 09 வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
1949 மார்ச் 24 ஆம் திகதி பிறந்த அவர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்தார்.
1970 ஆம் ஆண்டு களனி தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், பின்னர் பியகம தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1977 ஆம் ஆண்டில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர், ஜே.ஆர். ஜயவர்தன அரசின் அமைச்சரவையில் இளம் அமைச்சராக இருந்ததுடன் இளைஞர் விவகாரம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக அவர் அப்போது கடமையாற்றினார். 28 வயதில் வெளிவிவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் இளைஞர் விவகாரம், கல்வி மற்றும் தொழில், விஞ்ஞான மற்றும் தொழிநுட்பம் போன்ற கபினட் அமைச்சு பதவிகளை வகித்தார்.
1989 மார்ச் 06 முதல் 1993 மே 07 வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற சபை முதல்வராக பணியாற்றிய விக்ரசிங்க அவர்கள் 1994 முதல் 2001 வரை மற்றும் 2004 முதல் 2015 வரை இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவிவகித்துள்ளார்.
அவர் முதன்முறையாக 1993 மே மதம் 07 ஆம் திகதி பிரதமராக தெரிவு செய்யப்பட்டதுடன் 1994 ஆகஸ்ட் 19 வரை அந்த பதவியை வகித்தார். அவர் இலங்கையில் அதிக தடவை பிரதமராக பணியாற்றிய (5 தடவை) பிரதமராகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளார்.
விக்ரமசிங்க அவர்கள் இரண்டாவது முறையாக 2001 டிசம்பர் 09 ஆம் திகதி முதல் 2004 ஏப்ரல் 06 ஆம் திகதி வரையும், மூன்றாவது முறையாக 2015 ஜனவரி 09 முதல் 2015 ஆகஸ்ட் 17 வரையும், நான்காவது முறையாக 2015 ஆகஸ்ட் 17 முதல் 2018 ஒக்டோபர் 26 வரையும், ஐந்தாவது முறையாக 2018 டிசம்பர் 16 முதல் 2019 நவம்பர் 21 வரையும் பிரதமராக பதவி வகித்துள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ரணில் விக்ரமசிங்க அவர்கள் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதுடன், இலங்கை பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்று இந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்ட ஒரே ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் 1980 முதல் 88 வரை கல்வி அமைச்சராக தொலைதூர ஆங்கில ஆசிரியர் பயிற்சி எனப்படும் டெலின் ஆசிரியர் பயிற்சி, பூரண கால தொலைதூர சேவை ஆசிரியர் பயிற்சி, பாடசாலைகளுக்கான பகலுணவு, மீப்பே அழகியல் நிறுவனத்தை ஆரம்பித்தல், முறைசாரா கல்வியை விரிவாக்குதல், ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக மாவட்ட ஆசிரியர் சேவையை ஆரம்பித்தல், ஆசிரியர் சேவையை 60 வயது வரை நீடித்தல், பிக்குகளுக்கான ஆசிரியர் பயிற்சி, பாடசாலை அபிவிருத்தி சங்கங்களை ஆரம்பித்தல், பாடசாலை மேற்பார்வை அலகுகளை உருவாக்குதல், பாடசாலை திட்டமிடல் அலகு, இலவச பாடப்புத்தக விநியோகம், வலயக்கல்வி அலுவலகங்களை நிறுவுதல், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மாணவர் ஆலோசனை சேவையை ஆரம்பித்தல் என்பன அவரது கல்வி மறுமலர்ச்சிகளாக குறிப்பிடமுடியும். அதற்கு மேலதிகமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு கல்வி கல்லூரி முறைமையை ஆரம்பித்த விக்ரமசிங்க அவர்கள் 1988 இல் 09 தேசிய கல்விக் கல்லூரிகளை ஆரம்பித்தும் மற்றும் கல்வி ஆய்வுக்காக தேசிய கல்வி நிருவாகத்தை நிறுவியும் ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக கல்வியில் புதிய மறுமலர்ச்சிக்கு பங்களிப்பு செய்தார்.
ஆழ்ந்த இலக்கிய ஆர்வம் கொண்ட ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வரலாறு, தொல்பொருள், சட்டம், பொருளியல், பௌத்தம் மற்றும் இலக்கியம், உலகளாவிய இலக்கியம் மற்றும் சுயசரிதையில் என்பன தொடர்பில் ஆழ்ந்த அறிவு கொண்டவராவார். பல்வேறு மதங்கள் மற்றும் தத்துவங்கள் தொடர்பில் அதிக ஆர்வம் கொண்ட அவர் திரிபிடகம், தம்மபத, பௌத்த இலக்கியம் மற்றும் அரசியல் கோட்பாடு தொடர்பில் 'அரசியல் மற்றும் தர்மம்' எனும் புத்தகத்தை எழுதியுள்ளார்.
அவரது பாரியார் களனி பல்கலைக்கழகத்தின் ஆங்கில கல்வி பிரிவின் சிரேஷ்ட பேராசிரியையான மைத்ரி விக்ரமசிங்க ஆவர்.
2026-10-27
பாராளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஒக். 23) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கு அமைய பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.நவம்பர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியினரால் கையளிக்கப்படவிருக்கும் மீள்திருத்தப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.நவம்பர் 04ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.நவம்பர் 05ஆம் திகதி வியாழக்கிழமை, மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.நவம்பர் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள்தனியார் உறுப்பினர் பிரேரணைகௌரவ சட்டத்தரணிசித்ரால் பெர்னாந்துபுத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல்கௌரவ லசித் பாஷண கமகேவீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல்கௌரவ சட்டத்தரணிஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சிஇலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல்கௌரவ ரவீந்திர பண்டாரசூட்டிகை வலுசக்திக் கட்டமைப்பையும் சூட்டிகை மின் மானிகளையும் அறிமுகம் செய்தல்கௌரவ ரோஹண பண்டாரநீச்சல் திறமைகளை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயார் செய்தல்கௌரவ உபுல் கித்சிறிஉடவளவை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தல்கௌரவ சட்டத்தரணிஹிருணி விஜேசிங்கநீர்த்தாமரை செடியின் பரவலை சாதகமான வகையில் கட்டுப்படுத்துதல் மற்றும் அழித்தல்இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-10-27
கட்டார் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மாண்புமிகு ஹமாட் பின் மொஹமட் அல் – டொசாரி அவர்கள், கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (23) இலங்கைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது பொதுவான அர்ப்பணிப்பும் வலியுறுத்தப்பட்டது.கட்டார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு இவ்வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நிலையான பங்காளித்துவம் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் வகையில் புதிய தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதற்குமான தமது அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.தூதுவரை வரவேற்ற கௌரவ சபாநாயகர், கட்டார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவும் வலுவான மற்றும் சுமுகமான உறவுகளைச் சுட்டிக்காட்டியதுடன், இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதில் உயர்மட்டப் பரிமாற்றங்களின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். அண்மைக் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற உயர்மட்ட விஜயங்களை நினைவுகூர்ந்த அவர், பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதற்கும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் அவை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.கட்டாரில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் வழங்கும் பெறுமதிமிக்க பங்களிப்பையும் சபாநாயகர் பாராட்டினார். குறிப்பாக, கட்டாரின் அபிவிருத்திக்கு அவர்கள் வழங்கும் பங்களிப்பு மற்றும் அவர்கள் அனுப்பும் பணத்தின் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு கிடைக்கும் ஆதரவு ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். இலங்கைக்கு கட்டார் அரசு வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் வகையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.சர்வதேச பங்காளித்துவத்தை நெருக்கமாக்குவதில் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் பங்கை எடுத்துரைத்த கௌரவ சபாநாயகர், இலங்கை–கட்டார் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை அமைப்பதற்கான இலங்கையின் விருப்பத்தையும் தெரிவித்தார். இத்தகைய முயற்சியானது இரு நாடுகளின் பாராளுமன்ற நிறுவனங்களுக்கிடையில் கலந்துரையாடல், அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுதல், மேலும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான பயனுள்ள தளமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இங்கு கருத்துத் தெரிவித்த தூதுவர் அல் – டொசாரி, நம்பகமான நண்பராகவும் பங்காளியாகவும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கான கட்டாரின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், இரு நாட்டு மக்களுக்கிடையிலான நெருக்கமான தொடர்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். சுற்றுலா, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட முக்கிய துறைகளிலும், பரஸ்பர அக்கறைக்குரிய ஏனைய துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்தல், தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை இரு நாட்டு மக்களுக்கும் நடைமுறை நன்மைகளை வழங்கும் வகையில் மாற்றியமைத்தல் ஆகியவற்றுக்கான தமது பொதுவான அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.இந்த விஜயத்தின்போது, பாராளுமன்றக் கட்டடத்தின் கட்டடக்கலைச் சிறப்பையும் அதனைச் சூழவுள்ள இயற்கை அழகையும் தூதுவர் பாராட்டினார். அத்துடன், பாராளுமன்ற வளாகத்தில் சுற்றுப்பயணத்திலும் அவர் கலந்துகொண்டார்.
2026-10-27
அரசியல் தலைவர்கள் ஊழலற்றவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும் எனச் சமூகம் எதிர்பார்க்குமானால், அவ்வாறான தலைமைத்துவம் உருவாவதற்கு ஒட்டுமொத்த சமூகத்திலும் நேர்மையும் ஒழுக்க விழுமியங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனப் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தெரிவித்தார்.ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார்.நாட்டின் அரசியல் வாதிகள் சமூகத்திலிருந்தே தெரிவுசெய்யப்படுகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய பிரதி சபாநாயகர், எதிர்காலத் தலைவர்களான மாணவ சமூகத்தினர் பாடசாலைப் பருவத்திலிருந்தே நேர்மையானவர்களாக உருவாக வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தின் மாணவியருக்குப் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் நடைமுறை அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த பாடசாலை, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து இந்நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (ஜனாதிபதி நிதியம்) சுபாஷ் ரோஷன் அவர்கள், ஜனாதிபதி நிதியத்தினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் சேவைகளை விளக்கினார்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஆ.சர்வேஸ்வரன் அவர்கள் இலங்கையின் அரசியலமைப்புத் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். அத்துடன், பாராளுமன்றத்தின் பிரதான உத்தியோகத்தர் ரீ.என்.எம்.பி.ஷஹீட் பாராளுமன்றத்தின் வகிபாகம் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிய விளக்கவுரையொன்றை நிகழ்த்தினார்.மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, சபாநாயகர் தேர்தல் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்புடன் தொடங்கியது. இதன் அமைச்சர்கள் தங்கள் அமைச்சுக்களின் சார்பில் பாடசாலையில் செயற்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினர்.இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கௌரவ பிரதிசபாநாயகர், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்திற்குப் பொறுப்பான ஆசிரியை சிந்தூரி பத்மராஜ் நன்றியுரையாற்றினார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றால் கூட்டாக நிகழ்த்தப்படும் தொடர் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நதீக தங்கொல்ல, சைவ மங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் அருந்ததி ராஜவிஜயன் சார்பில் பிரதியதிபர் மலர்விழி ஸ்ரீகுமார், பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-10-23
‘பிரஜா சக்தி’ வறுமையை ஒழிப்பதற்கான தேசிய இயக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 25,000 மில்லியன் ரூபா நிதியில், 23,000 மில்லியன் ரூபா மாவட்ட மட்டத்தில் சமூக அபிவிருத்திச் சபைகளால் அடையாளம் காணப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 2,000 மில்லியன் ரூபாவிலிருந்து தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்படும் நடுத்தர அளவிலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பதிலிலேயே அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.‘பிரஜா சக்தி’ தேசிய இயக்கத்தின் கீழ் 24,221.38 மில்லியன் ரூபா செலவில் 15,725 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 15,316 திட்டங்கள் வாழ்வாதார அபிவிருத்தியின் கீழும், 273 திட்டங்கள் கல்வியின் கீழும், 136 திட்டங்கள் சுகாதாரத்தின் கீழும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அனைத்துத் திட்டங்களையும் 2026.12.31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள சமூக அபிவிருத்திச் சபைகள் ஊடாக, அந்தந்த மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் பல்பரிமாண வறுமையை ஒழிப்பதற்கு நேரடியாகப் பங்களிக்கும் திட்டங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. உற்பத்திப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, சமூகச் சூழல், மனித வள அபிவிருத்தி, பராமரிப்பு, விநியோக வலையமைப்புகள் மற்றும் அணுகல் வசதிகள் ஆகிய துறைகளின் கீழ் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகம் ஆகியவற்றின் ஊடாக மாற்றுத்திறன்களைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கல்வி அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய அமைச்சுகள் ஊடாகவும் மாற்றுத்திறன்களைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி அல்லது ஏனைய நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.அத்துடன், மாற்றுத்திறனாளிகளையும் அவர்களது குடும்ப அலகுகளையும் வலுவூட்டும் நோக்கில், அவர்களுக்கென விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், நிதியுதவி வழங்குதல், நிவாரண உதவிகளை வழங்குதல் மற்றும் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.