பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2020-12-04
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இரண்டு முன்னணி பாம் எண்ணெய் நிறுவனங்கள் காரணமாக 2013-2016 வருட காலப்பகுதியில் இலங்கைக்கு 6130 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பது பாராளுமன்ற கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக குறித்த காலப் பகுதியில் பிழையற்ற இணக்கமான பொருள் விளக்கக் குறியீட்டினை (HS Code) வழங்காமையால் இந்தத் தொகை இழக்கப்பட்டிருப்பதாக கணக்காய்வு திணைக்களத்தின் விசாரணைகளில் புலப்பட்டது.
இந்த மூன்று வருடங்களில் குறித்த நிறுவனங்களால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அவற்றிலிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பான விசாரணைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல நடவடிக்கை எடுத்திருந்ததுடன், இலங்கை சுங்கத் திணைக்களமும் இது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு பரிந்துரைத்தது. சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விஜித ரவிபிரிய இதற்கு இணக்கம் தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டு முதல் இறக்குமதியாளர்களால் விசேட தேவைக்கான வாகனங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அவை இரட்டைத் தேவையுடைய வாகனங்களாகப் பதிவுசெய்யப்பட்டமையால் வரியாகப் பெறப்படவேண்டிய 220 மில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு இழக்கப்பட்டுள்ளமையும் இங்கு வெளியானது. 2010-2019 வரையான காலப் பகுதியில் 443 விசேட தேவைக்கான வான்களுக்காக தலா 3 மில்லியன் ரூபா வீதம் ஆகக் குறைந்தது 1300 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வசூலித்திருக்க முடியும் எனவும் இங்கு புலப்பட்டது.
அத்துடன், மோட்டார் லொறி மற்றும் வான் போன்றவை விசேட தேவைக்கான வாகனங்கள் எனக் கூறி இறக்குமதி செய்யும் செயற்பாட்டின் கீழ் 2010ஆம் ஆண்டு முதல் 10 வான்களும், 414 லொறிகளும் இறக்குமதி செய்யப்பட்டமையால் பாரிய சுங்க வரி முறைகேடு இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வு சுட்டிக்காட்டியுள்ளமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அதேநேரம், ஏறத்தாழ ஒன்பது மில்லியன் ரூபா பெறுமதியான அதிசொகுசு மோட்டார் வாகனம் விசேட தேவைக்கான வாகனங்கள் பிரிவின் கீழ் 1.5 மில்லியன் ரூபாவை மாத்திரம் அறவிடப்பட்டு சுங்கத் திணைக்களத்தினால் வெளிச்செல்ல அனுமதிக்கப்பட்ட விடயம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. அந்த வாகனம் உரிய வாகனப் பிரிவின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்துக்கு 56 மில்லியன் ரூபா சுங்கவரி அறிவிடப்பட்டிருக்கும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகலவின் இணக்கப்பாட்டுடன், சுங்க, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு இடையில் கலந்துரையாடல்களை நடத்தி விரைவில் தானியங்கி கணினி ஒப்பீட்டு பொறிமுறையொன்றை நடத்துவதற்கு கோபா குழு முன்னர் வழங்கிய பரிந்துரையை நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமாயின் அதற்கான சட்டவாக்க நடவடிக்கைகளுக்கும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
பண்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் போது சுங்கத் திணைக்களத்தினால் போதுமானளவு உள்ளக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற விடயமும் இங்கு ஆராயப்பட்டது. நிர்வாகத்தில் காணப்படும் இடைவெளி காரணமாக ஒரே நிறுவனத்தினால் ஆறு சந்தர்ப்பங்களில் 39,335,091 ரூபா பெறுமதியான வாசனைத் திரவியங்கள் அடங்கிய ஆறு கொள்கலன்கள் வெளிநாட்டு மருந்துகள் எனப் பெயரிடப்பட்டு மோசடியான முறையில் விடுவிக்கப்பட்டுள்ளன. இதனால் இலங்கை அரசாங்கத்துக்கு 40,761,600 ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதுடன், மோசடியுடன் தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவில்லையென்றும் இங்கு வெளிப்பட்டது.
2019ஆம் ஆண்டு இலங்கையின் வருமானத்தில் 32.48 வீதத்தை சேகரிக்கும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள், உள்நுழைவதையும் வெளிச்செல்வதையும் பதிவுசெய்யும் கைவிரல் அடையாள இயந்திரம் பொருத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தமை, உள்ளக நிர்வாகத்தின் பலவீனம், திணைக்களத்தின் சட்டப் பிரிவுக்கான சட்டத்தரணி மற்றும் பிரதான கணக்காய்வாளர் ஒருவரை இணைத்துக்கொள்வது போன்ற விடயங்களும் குழு உறுப்பினர்களால் கலந்துரையாடப்பட்டன. கணக்காய்வு மீள்நோக்கு அறிக்கைக்கான முழுமையான பதில்களுடன் சுங்கத் திணைக்கள அதிகாரிகளை மற்றுமொரு தினம் அழைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, அசோக அபேசிங்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கலாநிதி ஹரினி அமரசூரி, வைத்திய கலாநிதி உபுல் கலபதி, எஸ்.சிறிதரன், நிரோஷா ரத்னசேகர மற்றும் வீரசுமன வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
2026-09-01
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 29) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது. ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக நடத்தப்பட்டதுடன், இது அதன் இரண்டாவது நிகழ்ச்சியாக அமைந்தது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்காகக் கொண்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் பலரும் இணைந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆராச்சி, சட்டத்தரணி சுசந்த தொடவத்த, லால் பிரேம்நாத், சுனில் ராஜபக்ஷ, எம்.கே.எம். அஸ்லம், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், அபுபக்கர் அதம்பாவா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, முஹம்மது பைசல், ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இங்கு, இளைஞர் சமூகம், கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான பிரச்சினைகள், தொடக்கக் கல்வி ஒழுங்குமுறை, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்துதல், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி மையங்களை நிறுவுதல், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்தல் மற்றும் தகவல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல், அத்துடன் உகந்த விளையாட்டு அரங்க வசதிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களது யோசனைகளையும் ஆலோசனைகளையும் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.
2026-09-01
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல் அடிப்படையிலான பிராந்திய நிகழ்ச்சித் தொடரான “Voice to Policy” மூன்றாவது நிகழ்வு, கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக செப்டெம்பர் 05ஆம் திகதி கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து செப்டெம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், பங்கேற்பாளர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது இயக்கத்தையும் ஊக்குவிக்கும் சின்னங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும்.CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
2026-08-21
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (ஓக. 19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.மேலும், நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் ஒன்றியம் அறிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒன்றியத்தின் கலந்துரையாடலில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற, இத்தொடர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கும் அபிவிருத்திப் பங்காளர்களான CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதேவேளை, இக்கூட்டத்தின்போது ‘INTER Pares’ திட்டத்தின் பிரதிநிதிகளுடன் இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஒன்றியத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலை ஒருங்கிணைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா அவர்களும் இதில் கலந்துகொண்டார்.
2026-08-18
உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

