logo

01

E   |   සි   |  

2020-08-20

செய்தி வகைகள் : செய்திகள் 

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். இதனையடுத்து சபாநாயகர் அவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க முன்னிலையில் உறுதியுரையெடுத்துக்கொண்டார்.

சபாநாயகர் பதவிக்கு கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் பெயரை சபைமுதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன முன்மொழிந்ததுடன். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார இதனை வழிமொழிந்தார்.

புதிய சபாநாயகரை முன்மொழிந்த மற்றும் வழிமொழிந்த உறுப்பினர்கள் அக்கிராசனத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

புதிய சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க சபையில் வாசித்தார். அதன் பின்னர் புதிய சபாநாயகரைத் தெரிவுசெய்யுமாறு அவர் அறிவித்ததும் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.

 

new-speaker-mahinda-yapa-abeywardana

 



தொடர்புடைய செய்திகள்

2026-08-14

பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் 2026-ஆம் ஆண்டின் சிறந்த இணையதளத்திற்கான வெள்ளி விருதை வென்றது

அரச துறையில் சிறந்த இணையதளமாகவும்  பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் தங்க விருது வென்றதுஇலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.parliament.lk, அண்மையில் நடைபெற்ற "BestWeb.lk 2026" விருது வழங்கும் விழாவில் 'சிறந்த இணையத்தளத்திற்கான' (Best Website Overall) ஒட்டுமொத்தப் பிரிவில் வெள்ளி விருதை (Silver Award) வென்றுள்ளது.அத்துடன், 'சிறந்த அரச இணையத்தளம்' (Best Government Website) பிரிவில் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தங்க விருதை (Gold Award) வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.LK டொமைன் பதிவகத்தினால் (LK Domain Registry) ஏற்பாடு செய்யப்பட்ட "BestWeb.lk 2026" விருது வழங்கும் விழா, 2026 ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் அமைந்துள்ள 'மொனார்க் இம்பீரியல்' (Monarch Imperial) மண்டபத்தில் நடைபெற்றது.இவ்வாண்டு 24 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 350க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் போட்டியில் பங்கேற்றன. தொழில்நுட்ப அமுலாக்கம், செயல்திறன், வடிவமைப்பு, உள்ளடக்கம், பாதுகாப்பு மற்றும் ஏனைய மேலதிக அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இணையத்தளங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இதற்கு முன்னரும் BestWeb.lk போட்டியில் பல சந்தர்ப்பங்களில் விருதுகளைப் பெற்றுள்ளது. நவீனமயப்படுத்தப்பட்ட புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு வருட இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு மீண்டும் இப்போட்டியில் பாராளுமன்ற இணையத்தளம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.இந்த விருது விழாவில் பல முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட இணையத்தளங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரதமரின் செயலாளர் திரு. ஜீ. பிரதீப் சபுதந்திரி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.இந்த அங்கீகாரம், பாராளுமன்றம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக பொதுமக்களுக்கு அணுகக்கூடிய, நம்பகமான மற்றும் பயனருக்கு எளிதான வகையில் பாராளுமன்றத் தகவல்களை வழங்குவதற்கும், தனது டிஜிட்டல் இருப்பை வலுப்படுத்துவதற்கும் உள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டுகின்றது.


2026-08-11

அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன

அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரமான ஓகஸ்ட் 18ஆம் திகதி முதுல் 21ஆம் திகதி வரைக்கான காலப்பகுதிக்குரிய பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கு அமைய பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஓகஸ்ட் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2496/38 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலினால் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.பி.ப.   5.00     இலங்கை தேசிய புகைப்படக்கலைச்சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டைத் தொடர்ந்து சட்டவாக்க குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.இதனைத் தொடர்ந்து பி.ப.   5.00 மணி முதல் பி.ப.   5.30  மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஓகஸ்ட் 19ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை நிதிச்சட்டத்தின் கீழான தீர்மானம் குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. (இப்பிரேரணை 2026.05.07 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள பாராளுமன்றத்தின் 4 ஆம் இலக்க ஒழுங்குப்              புத்தகத்திற்கான 4 ஆம் இலக்க அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது).இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஓகஸ்ட் 20ஆம் திகதி  வியாழக்கிழமை  மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பெண்களையும். இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்சட்டமூலம்) இரண்டாவது மதிப்பீட்டுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்று பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஓகஸ்ட் 21ஆம் திகதி   வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


2026-08-11

வாருங்கள்.... காணுங்கள்.... அறிந்துகொள்ளுங்கள்... இது உங்கள் பாராளுமன்றம்

நாளைய தலைவர்களாக உருவாகவிருக்கும் சின்னஞ்சிறு மலர்கள் பாராளுமன்ற வளாகத்தில் அடிக்கடி காணக்கூடிய மற்றுமொரு அழகிய காட்சியாகும்! தியவன்னாவின் அழகை ரசித்தவாறு பாராளுமன்றத்தை நேரில் பார்வையிட்டு, புதியதோர் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கிறது.இலங்கையின் நாலாபுறங்களிலிருந்தும் ஆரம்பப் பாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவானோர் தினமும் பாராளுமன்ற வளாகத்தை நேரில் பார்வையிடுவதற்காக வருகை தருகின்றனர்.புத்தகங்கள் மூலம் பாராளுமன்ற முறைமை தொடர்பில் பெற்றுக்கொள்ளும் அறிவை, பாராளுமன்றத்திலேயே நேரடியாக அவர்கள் கண்டறிந்துகொள்ள இதனமூலம் அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டுகிறது.பாராளுமன்ற சபா மண்டபம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைப் பார்வையிடுவதற்கு அப்பால், ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் அவர்கள் கற்கும் பாடங்களுக்கும் பொருத்தமான வகையில், பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் செயற்பாடு உள்ளிட்ட பணிகள் தொடர்பில் புரிந்துணர்வை வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமன்றி, பாராளுமன்றத்தைச் சூழவுள்ள இயற்கை அழகையும், எமது பாராளுமன்றத்தின் சிறப்புமிக்க கட்டடக்கலை மற்றும் கலைநயமிக்க பெறுமதிகள் பற்றிய புரிந்துணர்வையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.வாருங்கள்.... காணுங்கள்... அறிந்துகொள்ளுங்கள்... இது உங்கள் பாராளுமன்றம்!புகைப்படம் –கிட்டி கோவ் (Kiddie Cove) முன்பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் மற்றும் ஆசிரியர்கள் குழுவினர் நேற்று (10) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்.


2026-08-07

பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தை நிறுவுவதற்கு மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் ஆதரவு

கௌரவ சபாநாயகருக்கும் மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் சந்திப்புசபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பாராளுமன்றத்தின் பத்தாவது திணைக்களமாக மாற்றுவதற்குத் திட்டம்இலங்கை பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தை நிறுவுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களுக்கும், சர்வதேச அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையின் (Max Planck Foundation for International Peace and the Rule of Law) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கைப் பாராளுமன்றத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளராக ஆதரவளிக்கும் மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளைளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் நிர்வாகப் பணிப்பாளர் யோஹன்னஸ் க்ரூஸ்மார்க் (Johannes Krusemark), மூத்த ஆராய்ச்சி அதிகாரி ஹெய்லி நிக்கோல் எவன்ஸ் (Hailey Nicole Evans) மற்றும் சட்ட ஆலோசகர் ருவினி பெரேரா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.இதன்போது, முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்ற ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்திற்காகத் தயாரிக்கப்பட்ட திட்ட முன்மொழிவு எனக்கு சமர்ப்பிக்கப்பட்டது.இந்த மையமானது சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை மறுசீரமைத்து, இலங்கை பாராளுமன்றத்தின் பத்தாவது திணைக்களமாக நிறுவ எதிர்பார்ப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் குறிப்பிட்டார்.இந்த மையத்தின் மூலம்:•    உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் கொள்கை வகுப்பாளர்களாகப் பயிற்றுவித்தல்,•    சட்ட ஆக்கச் செயற்பாடுகளுக்கு அவசியமான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு வாய்ப்புகளை விரிவாக்குதல்,•    நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று, அவற்றின் பயனுள்ள தன்மையை மீண்டும் மதிப்பீடு செய்தல் (Post-Legislative Scrutiny),•    ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்களிப்பதற்கான வாய்ப்பை வழங்குதல்   ஆகிய நோக்கங்களை நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.மேலும், இந்தியாவின் மக்களவை (Lok Sabha) மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) பாராளுமன்றத்தில் செயற்படுத்தப்படும் பாராளுமன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் குறித்து மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு இத்திட்ட முன்மொழிவை வலுப்படுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் வலியுறுத்தினார்.இந்த முக்கியமான தேசியப் பணிக்கு வளவாளராக ஆதரவளிக்க ஒப்புக்கொண்ட மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளைக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும், இலங்கை பாராளுமன்றத்தின் சட்ட சேவைகள் பணிப்பாளர் திரு. ஜயலத் பெரேரா இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், குழுவால் தயாரிக்கப்பட்டு வரும் திட்ட முன்மொழிவு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறுதி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.  இச்செயல்முறையில் மாக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகளும் பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், குறித்த அறக்கட்டளை நிறுவனத்திற்கும் நன்றியைத் தெரிவித்தார். இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பாராளுமன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் காந்தி பீரிஸ் மற்றும் பாராளுமன்றத்தின் நிதிப் பணிப்பாளர் சரத் குமார ஆகியோர் காணப்படுகின்றனர். இச்சந்திப்பில் கௌரவ சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் சமீர கால்லகே மற்றும் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜனக மகேஷ் அத்தபத்து ஆகியோரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks