01

E   |   සි   |  

நவம்பர் முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்


2026, ஒக்டோபர் 23, 30 மற்றும் நவம்பர் 4 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 நவம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2026 நவம்பர் 03 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 1983 கறுப்பு யூலை துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அதன் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல் தொடர்பான பிரேரணை – முன்மொழியப்படவுள்ளது
(2026.10.23 ஆம் திகதிய 4(10) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப்புத்தகத்திற்கான அனுபந்தத்தில் திகதி குறிக்கப்படாத பிரேரணை முன்னறிவித்தலின் கீழ் பா. 136/2026 ஆம் இலக்கப் பிரேரணையைப் பார்க்கவும்)
மு.ப. 11.30 - பி.ப. 5.30 அரசாங்கத்தினால் முன்மொழியப்படவுள்ள ஒத்திவைப்பு பிரேரணை
 

2026 நவம்பர் 04 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.00 - பி.ப. 5.00 (i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(இவ்வொழுங்குவிதிகள் 03.11.2026 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 27 இடைநிறுத்தப்பட்டு, 04.11.2026 அன்று வெளியிடப்படவுள்ள பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் இத்தீர்மானம் சேர்க்கப்படும்)

(ii) 2026 இன் 07 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு – அங்கீகரிக்கப்படவுள்ளது
(இக்குறைநிரப்பு மதிப்பீடு 03.11.2026 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 27 இடைநிறுத்தப்பட்டு, 04.11.2026 அன்று வெளியிடப்படவுள்ள பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் இத்தீர்மானம் சேர்க்கப்படும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2026 நவம்பர் 05 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
(இந்தச் சட்டமூலம் 2026.10.21 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், குறித்த சட்டமூலத்திற்கு எதிராக அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படாத பட்சத்தில், அது இரண்டாம் மதிப்பீட்டிற்காக எடுத்துக்கொள்ளப்படும்)

(ii) 2026 இன் 08 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு – அங்கீகரிக்கப்படவுள்ளது
(இலங்கை விமானப்படை)

(இக்குறைநிரப்பு மதிப்பீடு 03.11.2026 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 27 இடைநிறுத்தப்பட்டு, 05.11.2026 அன்று வெளியிடப்படவுள்ள பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் இப்பிரேரணை சேர்க்கப்படும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2026 நவம்பர் 06 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன—
(i) புத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல்  
(கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து)

(ii) வீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல்  (கௌரவ லசித் பாஷண கமகே)

(iii) இலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல்  (கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி)

(iv) சூட்டிகை வலுசக்திக் கட்டமைப்பையும் சூட்டிகை மின் மானிகளையும் அறிமுகம் செய்தல்  (கௌரவ ரவீந்திர பண்டார)

(v) நீச்சல் திறமைகளை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயார் செய்தல்  (கௌரவ ரோஹண பண்டார)

(vi) உடவளவை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தல்  (கௌரவ உபுல் கித்சிறி)

(vii) நீர்த்தாமரை செடியின் பரவலை சாதகமான வகையில் கட்டுப்படுத்துதல் மற்றும் அழித்தல்  (கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks