01

E   |   සි   |  

ஒக்டோபர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்


2026, ஒக்டோபர் 16 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2026 ஒக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30 நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2026 ஒக்டோபர் 21 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30- பி.ப. 5.00 (i) பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் பிரேரணை – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.10.09 அன்று வெளியிடப்பட்ட 4(8) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.10.20 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 3 ஆம் இலக்க விடயம்)
(ii) 2026 இன் 06 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு – அங்கீகரிக்கப்படவுள்ளது
(அபிவிருத்தி நிதித் திணைக்களம்)

(இந்த குறைநிரப்பு மதிப்பீடு 2026.10.20 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்தி 2026.10.21 அன்று வெளியிடப்படவுள்ள 190 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)
பி.ப. 5.00 விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளன –
(i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2021), (2022) மற்றும் (2023)
(ii) பீ.சீ.சீ. லங்கா லிமிட்டட் கம்பனியின் வருடாந்த அறிக்கை (2021/2022) மற்றும் (2022/2023)
(iii) தேசிய உப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2021/2022) மற்றும் (2022/2023)
(iv) தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2022) மற்றும் (2023)
(v) இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2023)

(2026.10.09 ஆம் திகதிய 188 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 77 முதல் 86 வரையான விடயங்கள்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 

2026 ஒக்டோபர் 22 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு [எல்.டீ. - ஒ 8/2026]
(2026.10.09 ஆம் திகதிய 188 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 72ஆம் இலக்க விடயம்)
(ii) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு[எல்.டீ. - ஒ 11/2026]
(2026.10.09 ஆம் திகதிய 188 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 73ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளன –
(i) தேசிய தொழில் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2022)
(ii) தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2022)
(iii) மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2015), (2016), (2017) மற்றும் (2018)
(iv) ரணவிரு சேவா அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2023)
(v) ஜெனரல் சோ் ஜோன் கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை (2022) மற்றும் (2023)

(2026.10.09 ஆம் திகதிய 188 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 87 முதல் 92 வரையான மற்றும் 76 ஆம் இலக்க விடயங்கள் மேற்சொன்ன முறையே (i)-(iii) வரையான விடயங்களாகவும், (iv) ஆம் இலக்க விடயமாகவும் காணப்படுவதுடன், 2026.10.09 அன்று வெளியிடப்பட்ட 4(8) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.10.20 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 4 மற்றும் 5ஆம் இலக்க விடயங்கள் (v) ஆம் இலக்க விடயமாகவும் காணப்படுகின்றது)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2026 ஒக்டோபர் 23 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2026.10.09 ஆம் திகதிய 188 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 75ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks