logo

E   |   සි   |  

ஜுலை இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2026, ஜுலை 10 மற்றும் 22ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஜுலை மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2026 ஜுலை 21 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 2.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழான இரு தீர்மானங்கள் – அங்கீகரிக்கப்படவுள்ளன
(2026.07.10 ஆம் திகதிய 164 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 87 மற்றும் 88 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 2.30 - பி.ப. 5.30 பத்தாவது பாராளுமன்றத்தின் பொது மனுக்கள் பற்றிய குழுவின் பணி மற்றும் செயல்திறன் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை (பொது மனுக்கள் பற்றிய குழுவின் தவிசாளரினால் முன்மொழியப்படவுள்ளது)
 
2026 ஜுலை 22 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - பி.ப. 4.30 வாய்மூல விடைக்கான வினாக்கள் (50 வினாக்கள்)
(பாராளுமன்ற நிலையியற் கட்டளை 35 இனை இடைநிறுத்தி நிரலிடப்படவுள்ளதுடன் இது தொடர்பான அலுவல் பிரேரணை 2026.07.21 அன்று வெளியிடப்படவுள்ள பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படும்)
பி.ப. 4.30 - பி.ப. 5.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2026 ஜுலை 23 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 2.30 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளன
(2026.07.10 அன்று வெளியிடப்பட்ட பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகம் 4 இல் 2026.07.21 அன்றிற்கு நிரலிடப்பட்டுள்ள 3 மற்றும் 4 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 2.30 - பி.ப. 5.30 அரசாங்கத்தினால் பிரேரிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு பிரேரணை
 
2026 ஜுலை 24 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
(இப்பிரேரணை 2026.07.22 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 4(2) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் திகதி குறிக்கப்படாத பிரேரணை முன்னறிவித்தல் கீழ் நிரலிடப்பட்டுள்ளது)

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks