logo

01

E   |   සි   |  

ஜுன் முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்


2026, ஜுன் 1 மற்றும் 9 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஜுன் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2026 ஜுன் 09 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 2.30 (i) முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது
(ii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது
(iii) உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது
(iv) பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது

(2026.05.22 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(13) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.06.09 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட முறையே 2, 3, 4 மற்றும் 5 ஆம் இலக்க விடயங்கள்)

(v) பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழான தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.05.22 ஆம் திகதிய 152 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 2.30 - பி.ப. 5.30 பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.05.28 ஆம் திகதிய 2490/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியைப் பார்க்க. இத்தீர்மானம் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 ஐ இடைநிறுத்தி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது)
 

2026 ஜுன் 10 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள்
(2026.06.09 ஆம் திகதிய 2492/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி சபையின் விசேட அனுமதியுடன் 2026.06.09 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 ஐ இடைநிறுத்தியதன் பின்னர் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது)
(ii) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.05.28 ஆம் திகதிய 2490/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியைப் பார்க்க. 2026.06.09 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 ஐ இடைநிறுத்தியதன் பின்னர் இத்தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது)
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2026 ஜுன் 11 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 1.30 (i) மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2026.05.22 ஆம் திகதிய 152 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 5 ஆம் இலக்க விடயம்)
(ii) குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.05.22 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(13) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.06.09 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 7 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 1.30 – பி.ப. 5.30 நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 

2026 ஜுன் 12 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 2.30 (i) இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள்
(2026.05.22 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(13) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.06.09 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 6ஆம் இலக்க விடயம்)
(ii) 2026 இன் 02 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு – அங்கீகரிக்கப்படவுள்ளது
(தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களம்)

(மேற்சொன்ன குறைநிரப்பு மதிப்பீடு மற்றும் தொடர்புபட்ட பத்திரங்கள் 2026.06.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்)
பி.ப. 2.30 - பி.ப. 5.30 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி (அரசாங்கம்)
(இவ்விவாதம் 2026.05.20 அன்று ஆரம்பிக்கப்பட்டது)
 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks