பார்க்க

E   |   සි   |  

2014 நவம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட  குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2014

(ii) 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தின் 54 ஆம் பிரிவின் கீழ் மின்வலு, சக்தி அமைச்சரால் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில் மின்சார (அனுமதிப்பத்திரம் தொடர்பில் விண்ணப்பித்தலும் விலக்களிப்பும்) தொடர்பில் ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் 10 ஆம் திகதிய, 1883/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை

(iii) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஆண்டு அறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2015) – குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2015) ஒதுக்கப்பட்ட இருபத்திநான்காம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) 2015, 95 பெரும்பான்மை வாக்குகளால் சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

மேலும் விபரங்களுக்கு 'வரவு செலவுத் திட்டம் 2015' பிரிவுக்கு விஜயம் செய்க.


(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 14 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(iii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கட்டளை
(v) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம்
(vi) இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(vii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கட்டளை
(viii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(ix) இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(x) இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(xi) இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்


அதனையடுத்து, 1755 மணியளவில் பாராளுமன்றம் 2014 டிசம்பர் 12ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks