E   |   සි   |  

2014 ஒக்டோபர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டிற்கான ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை
(ii) 2013 ஆம் ஆண்டிற்கான பிரதேச அபிவிருத்தி வங்கி

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 2011 ஆம் ஆண்டுக்கான கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த முன்னேற்ற அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) நீர் வழங்கல், வடிகாலமைப்பு
(ii) புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

பற்றிய ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.

பின்வரும் சட்டமூலங்களின் “ஏ” நிலையியற் குழு அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன:-

(iii) இலங்கையில் றோமன் கத்தோலிக்க அதிமேற்றிராணியார், மேற்றிராணியார் (திருத்தம்)
(iv) ஜோன் செனவிரத்ன மன்றம் (கூட்டிணைத்தல்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பின்வரும் விடயங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i) டிஎவ்சீசீ வங்கி (நீக்கல் மற்றும் விளைவாந்தன்மையினவான ஏற்பாடுகள்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இலங்கை பொஸ்பேட் நிறுவனத்தின் ஊழல் மோசடி” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பி. ஹரிசன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1859 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஒக்டோபர் 23ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks