E   |   සි   |  

2014 ஒக்டோபர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும், 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் ஆக்கப்பட்ட;

(i) 2014 யூலை 15 ஆம் திகதிய 1871/23
(ii) 2014 மார்ச்சு 14 ஆம் திகதிய 1853/45
(iii) 2014 யூலை 17 ஆம் திகதிய 1871/35
(iv) 2014 மே 21 ஆம் திகதிய 1863/13
(v) 2014 யூலை 25 ஆம் திகதிய 1872/35
(vi) 2014 யூலை 09 ஆம் திகதிய 1870/21

ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்

(vii) 2013 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு
(viii) 2013 ஆம் ஆண்டிற்கான தொழிநுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(ix) 2012 ஆம் ஆண்டிற்கான கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை
(x) 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கை மலையக அபிவிருத்தி அதிகார சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(xi) 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட  குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2014

(xii) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 12(1)(V) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 யூலை 11 ஆம் திகதிய 1870/71 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற் கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) மாநகர சபைகள் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii) நகர சபைகள் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iv) பிரதேச சபை (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(v) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம்
(vi) உள்ளூர் அதிகாரசபைகள் வெற்றிடங்களை நிரப்புதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம்


அதனையடுத்து, 1820 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஒக்டோபர் 10ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks