பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹரின் பர்னாந்து அவர்களது இராஜினாமா பற்றி சபைக்கு அறிவிக்கப்பட்டது.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1977 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பிரிவிடல் சட்டத்தின் 8 ஆம் மற்றும் 29 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 82 அ ஆம் பிரிவின் கீழ் நீதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2014 யூலை மாதம் 18 ஆம் திகதிய 1871/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகம்
(iii) 2012 மார்ச்சு 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற நிதியாண்டிற்கான பீசீசீ லங்கா லிமிட்டெட்
(iv) 2013 மார்ச்சு 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற நிதியாண்டிற்கான பீசீசீ லங்கா லிமிட்டெட்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(v) 2013 ஆம் ஆண்டிற்கான கல்வி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பின்வரும் சட்டமூலங்களின் “ஏ” நிலையியற் குழு அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) இலங்கையில் றோமன் கத்தோலிக்க அதிமேற்றிராணியார், மேற்றிராணியார் (திருத்தம்)
(ii) ஜோன் செனவிரத்ன மன்றம் (கூட்டிணைத்தல்)
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
இலங்கைச் சமுத்திரப் பல்கலைக்கழகம்
இலங்கைச் சமுத்திரப் பல்கலைக்கழகத்தைத் தாபிப்பதற்கும், பேணுவதற்கும், நிருவகிப்பதற்கும் ஏற்பாடு செய்வதற்கும்; இலங்கைச் சமுத்திரப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்விக்கு இட்டுச் செல்கின்ற நெறிகளை வசதிப்படுத்துவதில் அவசியமான சட்ட உள்ளகக் கட்டமைப்பை ஏற்பாடுசெய்வதற்கும்; 1999 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, கடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் தேசிய நிறுவனச் சட்டத்தை நீக்கஞ்செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“வெளிநாட்டலுவல்கள்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அனுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1820 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஆகஸ்ட் 07ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks