E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான அரசாங்க சேவை ஆணைக்குழு
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான வவுனியா மாவட்ட செயலகம்
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான சிவில் விமானசேவை அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(v) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான தேசியப் பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகம்
(vii) 2011 ஆம் ஆண்டுக்கான முதியோர்களுக்கான தேசிய சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(viii) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 128 அ  ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2014 பெப்புருவரி 06 ஆம் திகதிய 1848/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


2014 மே மாதம் 07ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

“ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கைக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளப்படக்கூடாது” எனும் பிரேரணை எடுத்துக்கொள்ளப்பட்டதோடு, ஒத்திவைக்கப்பட்ட விவாதம் நாளை தொடரப்படவுள்ளது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சர்வதேச பாடசாலை மாணவர்களை அரச பாடசாலைகளின் உயர்தர வகுப்புகளில் சேர்த்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1927 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜூன் 18ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks