E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான  நிதி, திட்டமிடல் அமைச்சு
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான புனர்வாழ்வு அதிகார சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 2013 ஆம் ஆண்டுக்கான புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
(v) 2013 ஆம் ஆண்டுக்கான காணி, காணி அபிவிருத்தி அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-

கல்வியைப் பாதுகாப்பதற்காக தரப் பாதுகாப்பு பேரவையொன்றை நிறுவுதல்

பொறுப்பற்ற முறையில் பல்கலைக்கழக பெயர்களை பாவித்து இலங்கையினுள் பல கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படுவதனால் கல்வியை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதற்காக “தரப் பாதுகாப்பு பேரவையொன்றை” சட்டத்தின் மூலம் உடனடியாக நிறுவ வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

இலங்கையில் அறநெறி பாடசாலைகளின் கல்வி மற்றும் நிர்வாகத்தை ஒழுங்கு முறைப்படுத்தல்

இலங்கையில் சகல மதங்களினதும் அறநெறி பாடசாலைகளின் கல்வி மற்றும் நிர்வாகத்தை மேலும் ஒழுங்கு முறைப்படுத்துவதற்கும் பெளத்த அறநெறி பாசாலைகளில் காணப்படும் அறநெறி இறுதிப் பரீட்சை மற்றும் அறநெறி தர்மாசார்ய பரீட்சை மற்றும் சகல மதங்களினதும் அறநெறி பாடசாலைகளில் நடாத்தப்படும் இவற்றுக்கு இணையான பரீட்சைகளின் சான்றிதழ்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குதலும், அறநெறிப் பாடசாலைக்கு தொடர்ச்சியான மனித வளங்களுடன் பெளதீக வளங்களையும் வழங்குவதன் மூலம் அறநெறிப் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு துரித வேலைத்திட்டமொன்றை வகுத்தலும் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்

மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கை மற்றும் அதனோடு தொடர்புடைய உற்பத்திகளின் பதனிடல், சந்தைப்படுத்தல் மற்றும் பயிர்ச்செய்கை ஆகியவற்றுக்கான உதவிகளை நல்கி அதன்மூலம் தரமான பெறுமதி சேர்க்கப்பட்ட மரமுந்திரிகையை உற்பத்திகளின் முன்னணி ஏற்றுமதி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக இலங்கையை திகழச் செய்வதற்கு உதவக்கூடிய விதத்தில் மரமுந்திரிகைச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

இரண்டாம்நிலை பாடசாலைக் கல்வியையும் பல்கலைக்கழக கல்வியையும் ஆங்கில மொழியில் இலவசமாக போதித்தல்

இலங்கையின் சகல அரச பாடசாலைகளிலும் இரண்டாம் நிலைக் கல்வியும் சகல அரச பல்கலைக்கழகங்களிலும் முழுமையான கல்வியும் ஆங்கில மொழியில் போதிக்கப்பட வேண்டுமென்றும், மேற்படி கல்வியானது முழுமையாகவே அரச செலவில் வழங்கப்படுகின்ற இலவச கல்வியாக அமைதல் வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இணையத்தளங்களின் தணிக்கை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1925 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜூன் 17ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks