பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய நூலக, தகவல் விஞ்ஞான நிறுவகம்
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(iii) 2007 ஆம் ஆண்டில் 7 ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தின் 477 மற்றும் 157 (5) ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 527 ஆம் ஆம் பிரிவின் கீழும் 2005 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, சங்கங்கள் கட்டளைச் சட்டம் மீளத் (திருத்தப்பட்ட) சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் 1891 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் (123 ஆம் அத்தியாயம்) 19 ஆம் பிரிவின் கீழும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2013 திசெம்பர் மாதம் 18 ஆம் திகதிய 1841/8 இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையிலும் 2014 சனவரி மாதம் 27 ஆம் திகதிய 1847/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான வளிமண்டலவியல் திணைக்களத்தின் வருடாந்த சாத்திய அறிக்கை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) குமாரசிறி ஹெட்டிகே மன்றம் (கூட்டிணைத்தல்)
(ii) மொஹான் லால் கிரேரு மன்றம் (கூட்டிணைத்தல்)
(iii) விக்டர் அந்தனீ கல்வி, சமூக, பொருளாதார சேவைகள், அறக்கட்டளை மன்றம் (கூட்டிணைத்தல்)
பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 5, 7, 10, 11, 12 மற்றும் 13 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “ஏ” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-
(i) பண்டு பண்டாரநாயக்க ஹெல ஜன மன்றம் (கூட்டிணைத்தல்)
(ii) ஹிஸ்புல்லாஹ் மன்றம் (கூட்டிணைத்தல்)
(iii) ஸ்ரீ லங்கா ஹிரா பெளன்டேஷன் (கூட்டிணைத்தல்)
(iv) இலங்கை எழுத்தாளர்கள் அமைப்பு (கூட்டிணைத்தல்)
(v) தாம்பே, மீகொட போதிவர்தனாராம ஸ்ரீ மதுரசாம பிரிவென் விஹாரை அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)
(vi) இலங்கை ஒளிப்படவியலாளர் சங்கங்களின் பேரவை (கூட்டிணைத்தல்)
பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 4, 6, 8 மற்றும் 9 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “பீ” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-
(i) இலங்கை பட்டயக் கப்பற் தரகர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்)
(ii) தென்னிலங்கை மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சி பீடம் (கூட்டிணைத்தல்)
(iii) பரீரா முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்)
(iv) மிஸ்டிகல் ரோஸ் சர்வதேச நிறுவனம் (கூட்டிணைத்தல்)
ஒத்திவைப்புப் பிரேரணை
“2014.05.22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கை சுங்கம் தொடர்பான ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அருந்திக்க பர்னாந்து அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1853 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜூன் 06ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks