E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான ரஜரட்டை பல்கலைக்கழகம், இலங்கை
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான அழகியற்கலைகள் பல்கலைக்கழகம்
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகம்
(v) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிக்கு பல்கலைக்கழகம்
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெளத்த பாளி பல்கலைக்கழகம்
(vii) 2012 ஆம் ஆண்டுக்கான மொறட்டுவைப் பல்கலைக்கழகம், இலங்கை 
(viii) 2012 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகம், இலங்கையின் சுதேச வைத்திய நிறுவகம்
(ix) 2012 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்டப் பின்படிப்பு நிறுவனம்
(x) 2012 ஆம் ஆண்டுக்கான தொழில் திணைக்களம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(xi) 2013 ஆம் ஆண்டுக்கான பொலன்னறுவை மாவட்டச் செயலகம்
(xii) 2013 ஆம் ஆண்டுக்கான கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு
(xiii) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய மரபுரிமைகள் அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ புத்திக பதிரண அவர்களுக்கு “சஹன சமுதாய அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ (திருமதி) மாலனீ பொன்சேகா அவர்களுக்கு “ஜீவன் குமாரணதுங்க மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) என்பவை சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

கமக்காரர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இணைந்த சுகாதார கற்கை மாணவர்களுக்கான பிணி ஆய்வுப் பயிற்சி” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1910 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜூன் 04ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks