பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 ஆம் ஆண்டுக்கான ஊழியர் சேம நிதியத்தின் ஆண்டறிக்கை
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா அரச பொறியியற் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ (செல்வி) கமலா ரணதுங்க அவர்களுக்கு “சங்கமித்தா சுத்தாக்கர மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(ii) கெளரவ செஹான் சேமசிங்க அவர்களுக்கு “ரன்ஜித் சியம்பலாபிடிய சிநேகபூர்வ மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(iii) கெளரவ (திருமதி) மாலனீ பொன்சேக்கா அவர்களுக்கு “அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சுகாதார அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
நம்பிக்கையில்லாப் பிரேரணை
அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 57; எதிராக 151) பின்னர் நிராகரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றம் 2014 மே 22ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks