பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணை சபையால் நிறைவேற்றப்பட்டது:-
ஓய்வு பெறும் வயதெல்லையை நீடித்தல்
அரச அலுவலர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 வருடம்வரை நீடிக்கப்பட வேண்டுமென்றும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டால் விசேட திறமையுள்ள அரச அலுவலர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 70 வருடம்வரை நீடிக்கப்பட வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
மாவட்ட மட்டத்தில் தகவல் மத்திய நிலையங்களை நிறுவுதல்
புவியியல் அமைவு, வரலாற்றுப் பின்னணி, பயிரிடப்படும் பயிரினங்கள், வீதி முறைமை அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், புகையிரத நிலையங்கள் மற்றும் பேரூந்து தரிப்பிடங்கள் ஆகிய அனைத்து தகவல்களும் கணனிமயப்படுத்தப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட தகவல் மத்திய நிலையங்களை நிறுவுவதற்கும், அதன் முதலாவது கட்டத்தின் போது மாகாண மட்டத்திலும் இரண்டாவது கட்டத்தின் போது மாவட்ட மட்டத்திலும் மூன்றாவது கட்டத்தின் போது பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேச மட்டத்திலும் இந்நிலையங்களை நிறுவவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
இலங்கையைச் சூழ மாசற்ற கடல்சார் சுற்றாடலை உறுதிப்படுத்தல்
2020 ஆம் ஆண்டளவில் ஸ்திரத்தன்மை மிக்க தேசிய அபிவிருத்திக்காகவும் இலங்கை மக்கள் மற்றும் அதன் பொருளாதாரம் ஆகியவற்றின் நலனுக்காகவும் இலங்கையைச் சூழ மாசற்ற கடல்சார் சுற்றாடலை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
நீதிபதிகள் தொழில் பயிற்சி நிறுவகமொன்றைத் தாபித்தல்
இலங்கையிலுள்ள நீதிமன்றங்களில் நீதி நிர்வாகத்தின் பொருட்டு பண்புசார் மேம்பட்ட நீதிபதிகளை உருவாக்குவதே முதன்மைத் தேவையாக காணப்படுவதால், அதற்கு தேவையான “பண்புசார் மேம்பட்ட” பயிற்சியொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு தற்போது தாபிக்கப்பட்டுள்ள “இலங்கை நீதிபதிகள் நிறுவகம்” எவ்விதத்திலும் போதுமானதாக இல்லையென்பதால், நீதிபதிகளை பயிற்றுவிப்பதற்கு பல்கலைக்கழகமொன்றின் தரத்துக்கேற்ற நீதிபதிகளின் தொழிற்பயிற்சி நிறுவகமொன்றைத் தாபித்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
அதனையடுத்து, 1820 மணியளவில் பாராளுமன்றம் 2014 மே 20ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks