E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட  குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2013

(ii) 2011 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சாரசபை
(iv) 2009, 2010, மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி, பயிற்றுவிப்பு நிலையத்தின் ஆண்டறிக்கை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

திருத்தப்பட்டவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழ் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்;

(v) 2014 சனவரி 30 ஆம் திகதிய 1847/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(vi) 2014 சனவரி 30 ஆம் திகதிய 1847/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(vii) 2014 சனவரி 30 ஆம் திகதிய 1847/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி


2013 திசெம்பர் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பொன். செல்வராசா அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ ஹுனைஸ் பாறூக் அவர்களுக்கு “றிசாத் பதியுதீன் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

காணி கொள்ளுதல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2,3,4,6,10 மற்றும் 12ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) சபையால் அங்கீகரிக்கப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “ஏ”க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

(i) ஏர்ல் குணசேகர மன்றம் (கூட்டிணைத்தல்)
(ii) கல்பவுருக் ஷ சங்வர்தன பதனம (கூட்டிணைத்தல்)
(iii) குடாபுத்கமுவ ஸ்ரீ பியதஸ்ஸநாராம விகாரயே செயற்சாதனைச் சங்கம் (கூட்டிணைத்தல்)
(iv) மவுன்ட் கார்மல் கல்வி நிறுவகம் (கூட்டிணைத்தல்)
(v) இலங்கை றோமன் கத்தோலிக்க அதிமேற்றிராணியார், மேற்றிராணியார் (திருத்தம்)
(vi) சுவாபிமானி தஹம் சவிய (கூட்டிணைத்தல்)

பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 5,7,8,9,11,13 மற்றும் 14ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) சபையால் அங்கீகரிக்கப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “பீ”க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

(vii) குளோபல் ஹியுமெனிடேரியன் பவுன்டேஷன் (கூட்டிணைத்தல்)
(viii) மினுவாங்கொட சிங்க மன்றம் (கூட்டிணைத்தல்)
(ix) மைத்திரி மன்றம் (கூட்டிணைத்தல்)
(x) யூ.எல்.எம். பாறூக் மன்றம் (கூட்டிணைத்தல்)
(xi) விக்டர் அந்தனீ கல்வி, சமூக, பொருளாதார சேவைகள், அறக்கட்டளை மன்றம் (கூட்டிணைத்தல்)
(xii) ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் (கூட்டிணைத்தல்)
(xiii) இலங்கை தொழில்வாண்மையிலான சமூகப் பணியாளர்களின் ஒன்றியம் (கூட்டிணைத்தல்)

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 15 முதல் 17 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் (கூட்டிணைத்தல்) சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

• இலங்கைப் புவிச்சரிதவியல் நிறுவகம்
• பிலிப் குணவர்தன ஞாபகார்த்த சங்கம்
• சந்திம வீரக்கொடி மன்றம் (கூட்டிணைத்தல்)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“நான்கு வருட இணைந்த உடல்நல விஞ்ஞான பட்ட கற்கைநெறியை மீள நடைமுறைப்படுத்துதல்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அஜித் பி. பெரேரா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1920 மணியளவில் பாராளுமன்றம் 2014 பெப்ரவரி 19ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks