E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம் (2013 நவெம்பர் மாதம் 21ஆந் திகதிய 1837/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(ii) அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரை மற்றும் 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஏற்றுமதிகள், இறக்குமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4(3) ஆம் பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியால் ஆக்கப்பட்டு, 2013 நவெம்பர் மாதம் 21 ஆம் திகதிய 1837/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(iii) 2012 ஆம் ஆண்டுக்கான பொதுத் திறைசேரியின் அரசிறைக் கொள்கைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


பாராளுமன்றத் தெரிகுழு

இலங்கை மக்களுக்கு ஒரே தேச மக்களாக வாழ்வதற்கு தத்துவமளிப்பதற்கான அரசியல் மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கைகளை் பற்றி விதந்துரைத்து அறிக்கை செய்வதற்காக 2014 யூன் மாதம் 21ஆம் திகதிவரை காலத்தை மேலும் நீடிப்பதற்கான கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வரின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ அசல ஜாகொடகே அவர்களுக்கு “தேசிய சுற்றுச்சூழல் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ எம். எஸ். தெளபீக் அவர்களுக்கு “ரிழ்வானிய்யா அரபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(iii) கெளரவ (திருமதி) அனோமா கமகே அவர்களுக்கு “தயா சரண அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i), (ii) மற்றும் (iii) என்பவை முறையே சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ஆகியோருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2014) – குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2014) ஒதுக்கப்பட்ட இருபத்திரெண்டாவது நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


அதனையடுத்து, 1835 மணியளவில் பாராளுமன்றமானது 2013 டிசம்பர் 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2014]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks