பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை காணிகள் சீராக்கல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்
(ii) 2012 ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கி
(iii) 2011 ஆம் ஆண்டிற்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபை
(iv) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(v) 2011 ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்பு நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

(vi) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான சிரேஷ்ட அமைச்சர்களின் செயலகம்
(vii) 2012 ஆம் ஆண்டிற்கான திருகோணமலை மாவட்டச் செயலகம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ அசல ஜாகொடகே அவர்களுக்கு “இலங்கை ஆராய்ச்சிக்கும் அபிவிருத்திக்குமான நிறுவன (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ எம்.பீ. பாறூக் அவர்களுக்கு “ஸ்ரீ லங்கா செத்சேவா மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன (i) மற்றும் (ii)ஆம் சட்டமூலங்கள் முறையே தொழில்நுட்பம், ஆராய்ச்சி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்)சட்டமூலம்

சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“விவசாயப் பிரச்சினைகள்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அனுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2013 நவம்பர் 21ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks