பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டிற்கான பெற்றோலியத் தொழிற்துறை அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்

(ii) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை தேசிய ஆராய்ச்சி மன்றம்
(iii) 2011 ஆம் ஆண்டிற்கான அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

ஒதுக்கீடு
2014 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின்போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாடுகளைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடு களுக்கான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குக் கிடைக்கக் கூடியதாகவுள்ள அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணமாகக் கொடுப்பதை இயலச் செய்வதற்கும்; திரட்டு நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடுசெய்வதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடுசெய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.

கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தம்)
1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தை திருத்துவதற்கொனதொரு சட்டமூலத்தினை கௌரவ கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 9 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i) மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(ii) கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம்
(iii) வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(iv) நிதிச்சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(v) நிதிச்சட்டத்தின் கீழ் கட்டளை
(vi) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மில்லனிய பகுதியில் கல் அகழ்வினால் ஏற்படுகின்ற சூழல் மாசடைவு” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் பீ. பெரேரா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1918 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஒக்டோபர் 23ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks