பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


திரு. தயாசிரி ஜயசேகர அவர்கள் கேட்டு விலகியுள்ளதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ நலின் நிலந்த பண்டார விஜேரத்ன ஜயமஹ ஹிட்டிஹாமிலாகே அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கை வங்கி
(ii) 2005, 2006, 2007, 2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவனம்
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகம்
(iv) 2009 ஆம் ஆண்டிற்கான இலங்கை அரசாங்க பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம்
(v) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vi) 2012 ஆம் ஆண்டிற்கான யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்
(vii) 2012 ஆம் ஆண்டிற்கான மீள் குடியேற்ற அமைச்சு
(viii) 2012 ஆம் ஆண்டிற்கான தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சு
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அபிவிருத்தி (திருத்தம்)

1994 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அபிவிருத்திச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“காணிப் பிரச்சினைகள்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இராஜவரோதியம் சம்பந்தன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஆகஸ்ட் 21ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks