பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 ஆம் ஆண்டுக்கான மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம்
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுரப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகம்
(iii) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவனம்
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(v) 2012 ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் செயற்பாட்டு அறிக்கை
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களுக்கு "ஸெய்யித் அப்துர் ரஹ்மான் ஜிப்ரி மெளலானா ஞாபகார்த்த அறக்கட்டளை (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ ஹுனைஸ் பாறூக் அவர்களுக்கு “அல்ஹசன் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன (i) மற்றும் (ii)ஆம் சட்டமூலங்கள் சமூக சேவைகள் மற்றும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
ஒத்திவைக்கப்பட்ட விவாதம் நாளை தொடரப்படவுள்ளது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான மருத்துவச் சான்றிதழ்களை கம்பஹ மாவட்ட மருத்துவ நிலையத்தில் வழங்கல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1918 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூலை 24ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks