பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும், 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ், விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் சனாதிபதியினால் ஆக்கப்பட்ட கட்டளைகள்
(i) 2012.12.08ஆம் திகதிய 1787/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(ii) 2013.02.08ஆம் திகதிய 1796/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(iii) 2013.05.03ஆம் திகதிய 1808/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(iv) 2013.06.07ஆம் திகதிய 1813/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(v) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம் (2013.06.20ஆம் திகதிய 1815/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(vi) அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும், 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க, சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 அ ஆம் பிரிவின் கீழ், சனாதிபதியானல் இறக்குமதி பெருட்கள் மீது சுங்கத்தீர்வை தொடர்பில் ஆக்கப்பட்ட கட்டளை (2013.06.20ஆம் திகதிய 1815/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(vii) 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கை உயர் தொழினுட்பக் கல்வி நிறுவகம்
(viii) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெளத்த, பாளி பல்கலைக்கழகம்
(ix) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம்
(x) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழக தொழிநுட்ப நிறுவனம்
(xi) 2010 ஆம் ஆண்டுக்கான பேராதனை பல்கலைக்கழக விவசாயப் பட்டப் பின் படிப்பு நிறுவனம்
(xii) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானத்தில் உயர்தரக் கல்விக்கான தேசிய நிலையம்
(xiii) 2011 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக கணினிப் பாடசாலை
(xiv) 2011 ஆம் ஆண்டுக்கான உயிர் இரசாயனவியல், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர்த் தொழில் நுட்பவியல் நிறுவகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(xv) 2012 ஆம் ஆண்டுக்கான மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம்
2013 ஜூன் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அனுர திஸாநாயக்க அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 130ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்) “அபிமானி சமூக அபிவிருத்தி மற்றும் கலாசார மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு சபையில் பிரேரிக்கப்பட்டு (சட்டவாக்க) நிலையியற்குழு “ஏ” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“சூழலில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1502 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூலை 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks