பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான  அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை 2013

(ii) 2012 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தில் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத்திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட 2013 ஏப்பிறல் மாதத்திற்கான குறைநிரப்பு ஒதுக்கீடுகள்

(iii) 2012 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் சேவைகள் அமைச்சு
(iv) 2012 ஆண்டுக்கான தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(v) 2010 ஆம் ஆண்டுக்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபை
(vi) 2011 ஆண்டுக்கான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் 

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம அவர்களுக்கு “ஸிவ்முனி ஸே வெஹெர பெளத்த மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இலங்கையிலுள்ள கெசினோக்கள்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1858 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூலை 10ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks