பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான இலங்கை மன்றம்
(ii) 2011/12 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்படட இலங்கை பொஸ்பேட் நிறுவனம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 2012 ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான களுத்துறை மாவட்டச் செயலகம்
(v) 2012 ஆம் ஆண்டுக்கான கேகாலை மாவட்டச் செயலகம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(vi) காலத்துக்குகாலம் திருத்தப்பட்டவாறான 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் 46 ஆம் பிரிவின் கீழ் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2013.05.13 ஆந் திகதிய 1810/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (டாக்டர்) ஜயலத் ஜயவர்தன அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


2013 ஜூன் மாதம் 05ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ரவி கருணாநாயக்க அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (சட்டவாக்க) நிலையியற்குழு "பீ" க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

(i) போதிராஜாராம கல்வி மற்றும் கலாசார மன்றம் (கூட்டிணைத்தல்)
(ii) இலங்கைக் கணனிச் சங்கம் (கூட்டிணைத்தல்)



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"கொழும்பு மாநகர மற்றும் ஏனைய நகரங்களின் அபிவிருத்தி" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூலை 09ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks