பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i) அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரை மற்றும் 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2013.06.05ஆந் திகதிய 1813/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி) (ii) அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரை மற்றும் 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2013.06.05ஆந் திகதிய 1813/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி) (iii) 2012 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2013 தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள் கெளரவ திளும் அமுணுகம அவர்களுக்கு "டென்ஸ்ரீ கல்வி மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு இச்சட்டமூலம் கல்வி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் பாதுகாப்புச் சேவைகள் ஏவல் மற்றும் பணியாட்டொகுதிக் கல்லூரி (திருத்தச்) சட்டமூலம் சபையால் நிறைவேற்றப்பட்டது. ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை "குளியாப்பிடியவில் நடைபெறவுள்ள (2014) 'தெயட கிருல'" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1918 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூன் 21ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks