பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் வருமானத்தின் மீது வரிகொடாது தட்டிக்கழிப்பதைத் தடுப்பதற்குமாக இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் இந்தியக் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கை
(ii) 2012 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2013 ஏப்பிறல்
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் அமைச்சு
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(v) 2012 ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களம்
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற எதிர்க்கட்சி முதல்வர் அலுவலகம்
(vii) 2012 ஆண்டுக்கான பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு
(viii) 2012 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்ட செயலகம்
(ix) 2012 ஆம் ஆண்டுக்கான சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு
(x) 2012 ஆண்டுக்கான அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
(xi) 2012 ஆண்டுக்கான உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ (வண) அதுரலிய ரதன தேரர் அவர்களுக்கு
"இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்களுக்கு
"அலவி மெளலானா மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) முறையே பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ஆகியோருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 3 மற்றும் 1 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள், 2013.06.18 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உடன்பாட்டிற்கு அமைவாக சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i) தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் ? திருத்தங்களுடன்
(2013.06.06 ஆந் திகதி விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம்)
(ii) பாராளுமன்ற புலமைப் பரிசிற் சபை (நீக்கம்)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"கண்டி மாநக வரையறைக்கான மாற்று வீதிகள்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1835 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூன் 19ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.