பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ அ. அஜித் குமார மான்னப்பெரும அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகார சபை
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான நெல் சந்தைப்படுத்தல் சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சுங்கம்
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான மாத்தறை மாவட்ட செயலகம்
(v) 2012 ஆம் ஆண்டுக்கான மொனராகலை நிருவாக மாவட்ட செயலகம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பாராளுமன்ற புலமைப் பரிசிற் சபை (நீக்கம்)

2002 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க, பாராளுமன்றப் புலமைப் பரிசிற் சபைச் சட்டத்தை நீக்கம் செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1514 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூன் 05ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks