பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)
2011 ஆம் ஆண்டுக்கான லோஹோர் சீமாட்டி கடன் நிதியம்
(ii)
2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை அச்சீட்டு நிறுவகம்
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை
(iv)
2012 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ (திருமதி) சந்திராணி பண்டார ஜயசிங்க அவர்களுக்கு
"கே.டீ.எம். சந்திரா பண்டார சமுதாய சேவைகள் மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ விக்டர் அந்தனீ அவர்களுக்கு
"பண்டகசாலை கருத்திட்ட (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன இரு சட்டமூலங்களும் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
"2013.04.09 ஆம் திகதியன்று சபா மண்டபத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கௌரவ வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோரால் விடுக்கப்பட்ட இரு அறிக்கைகள்" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ இராஜவரோதியம் சம்பந்தன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1835 மணியளவில் பாராளுமன்றம் 2013 மே 22ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.