பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அரசாங்கக் கட்சி முதற்கோலாசானின் அலுவலகத்தின் வருடாந்த செயற்சாதனை அறிக்கை
(ii)
2008,
2009 மற்றும்
2010 ஆம் ஆண்டுகளுக்கான டவர் மண்டபத் திரையரங்கு மன்றத்தின் ஆண்டறிக்கைகளும் நிதிசார் கூற்றுக்களும்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ வை.ஜீ. பத்மசிறி அவர்களுக்கு
"1988 ஆம் ஆண்டின் 75ஆம் இலக்க, சித்தசுவாதீனம் குறைந்த பிள்ளைகளுக்கான பாடசாலையின் நலன்புரிச் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பின்வரும் பிரேரணை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது:-
அரசியல் கட்சிகளினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி கணக்காய்வு அறிக்கைகள் சமர்ப்பித்தல்
எல்லா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினாலும் பெறப்பட்ட வருமானமும் செலவிடப்பட்ட செலவினமும் வருடாந்தம் கணக்காய்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
ஒத்திவைப்புப் பிரேரணை
?சிறுநீரகப் பிரச்சினைகள்? எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2013 மே 21ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.