E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) அரசியலமைப்பின் 44 (2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2013.04.03ஆம் திகதிய 1804/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

(ii) 2012 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2013

(iii) 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கி
(iv) 2010/2011 ஆம் ஆண்டிற்கான ‍களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்
(v) 2011 ஆம் ஆண்டிற்கான சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vi) 2011 ஆம் ஆண்டிற்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் செயலாற்றுகை அறிக்கை


2013 மார்ச் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்கள்

? கெளரவ ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்
? கெளரவ சுஜீவ சேனசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்

அவர்களினால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமைகள் விடயத்தினின்றும் எழுந்த விடயங்கள், கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ சாந்த பண்டார அவர்களுக்கு "மைத்திரிபால சிறிசேன லக்தரு திரிய மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

நம்பிக்கையில்லாப் பிரேரணை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சர் கெளரவ டிலான் பெரேரா அவர்கள் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 32; எதிராக 136) நிராகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1935 மணியளவில் பாராளுமன்றம் 2013 மே 08ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks