E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரை மற்றும் 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஏற்றுமதி, இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்ட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2013.04.03 ஆம் திகதிய 1804/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

(ii) 2011 ஆம் ஆண்டுக்கான லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி
(iii) 2010/2011 ஆம் ஆண்டுக்கான வரையறுத்த இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(v) 2012 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

சுரங்கங்கள், கனிப்பொருட்கள் (திருத்தம்)

1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, சுரங்கங்கள், கனிப்பொருட்கள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 11 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன. விடயங்கள் (iv) முதல் (vii) வரை திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-

(i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள்
(iii) உணவுச் சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்குவிதிகள்
(iv) திருமணப் பதிவு (திருத்தச்) சட்டமூலம்
(v) கண்டிய திருமண, மணநீக்கம் (திருத்தச்) சட்டமூலம்
(vi) முஸ்லிம் திருமண, மணநீக்கம் (திருத்தச்) சட்டமூலம்
(vii) பிறப்புக்கள், இறப்புக்கள் பதிவு (திருத்தச்) சட்டமூலம்
(viii) ஹங்குரான்கெத மாதன்வல ரஜமகா விகாரை அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்



அதனையடுத்து, 1707 மணியளவில் பாராளுமன்றம் 2013 மே 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks