E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டிற்கான உள்நாட்டுக் கடன் அபிவிருத்தி நிதியம்
(ii) 2011 ஆம் ஆண்டிற்கான நில அளவைச் சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


(i) 2013 பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பாலித ரங்கே பண்டார அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம்,
(ii) 2013 பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம்,

கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ எம்.பீ. பாறூக் அவர்களுக்கு "தெல்தொட்ட மஹ்பலுல் உலமா அரபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பின்வரும் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-

(i) உண்ணாட்டரசிறை (திருத்தம்) -
(ii) நொத்தாரிசு (திருத்தம்)
- (வாக்கெடுப்பின்போது- ஆதரவாக 70; எதிராக 09)
(iii) ஆவணப் பதிவு (திருத்தம்) - (வாக்கெடுப்பின்போது- ஆதரவாக 74; எதிராக 09)
(iv) அற்றோனித் தத்துவம் (திருத்தம்) - (வாக்கெடுப்பின்போது- ஆதரவாக 74; எதிராக 09)


அதனையடுத்து, 1835 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஏப்ரல் 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks