பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவினத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் ? 2012
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் பட்டமளிக்கும் நிறுவகமாக;
(ii) ?தேசிய வியாபார முகாமைத்துவப் பாடசாலை (NSBM)? ஐ அங்கீகரித்து உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளை (2013.03.05ஆம் திகதிய 1800/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(iii) ?இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகம் (ICASL)? ஐ அங்கீகரித்து உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளை (2013.03.12ஆம் திகதிய 1801/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க, உணவுச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ் உணவு மதியுரைக் குழுவின் கலந்தாலோசனையுடன் சுகாதார அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv) 2011.01.14 ஆம் திகதிய 1688/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(v) 2011.11.25 ஆம் திகதிய 1733/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(vi) 2012.01.26 ஆம் திகதிய 1742/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(vii) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2013.02.08 ஆம் திகதிய 1796/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(viii) 2011 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 2000 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்திச் சட்டத்தின் பிரிவு 1ஆ என்பதுடன் சேர்த்து வாசிக்கப்படும் சொல்லப்பட்ட சட்டத்தின் 95 ஆம் பிரிவின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2013.03.15 ஆம் திகதிய 1801 / 36 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி)
(ix)
2012 ஆம் ஆண்டிற்கான தேர்தல் ஆணையாளரின் நிருவாக அறிக்கை
(x)
2008 ஆம் ஆண்டிற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவனம்
(xi)
2010 ஆம் ஆண்டிற்கான அறுவடைக்குப் பின் - தொழில்நுட்ப நிறுவகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பின்வரும் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1,3,4,5,6,10 மற்றும்11ஆம் இலக்கம் வரையான விடயங்களாகக் காணப்படும்) இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i) சேர் பெறுமதி வரி (திருத்தம்) - திருத்தங்களுடன்
(ii) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்) - திருத்தங்களுடன்
(iii) நிதி - திருத்தங்களுடன்
(iv) பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) - திருத்தங்களுடன்
(v) வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு (திருத்தம்) - திருத்தங்களுடன் (வாக்கெடுப்பின்போது- ஆதரவாக 105; எதிராக 05)
(vi) நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) (திருத்தம்)
(vii) செயல்நுணுக்கு அபிவிருத்திக் கருத்திட்டங்கள் (திருத்தம்)
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஏப்ரல் 10ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.