E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியால் ஆக்கப்பட்ட கட்டளை (2012.12.17ஆம் திகதிய 1789/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

(ii) 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (1) ஆம் உப பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளை (2012.12.31ஆம் திகதிய 1791/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

(iii) 2011 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் மூலம் இறுதியாக திருத்தப்பட்ட 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 இ பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளை (2013.01.15ஆம் திகதிய 1793/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் கீழ் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரால் ஆக்கப்பட்ட இரு கட்டளைகள்

(iv) 2013.01.22ஆம் திகதிய 1794/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(v) 2013.01.22ஆம் திகதிய 1794/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி


ஒத்திவைப்புப் பிரேரணை

"கல்வி - பாடசாலைகளை மூடிவிடுதல் மற்றும் ஏனைய இடர்பாடுகள்" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ விஜித ஹேரத் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றம் 2013 மார்ச் 08ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks