E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான கொழும்பு பல்கலைக்கழக சுதேச வைத்திய நிறுவகம்
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபை
(v) 2010 ஆம் ஆண்டுக்கான தென்னை பயிர்ச்செய்கை சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vi) 2011 ஆம் ஆண்டுக்கான வளிமண்டலவியல் திணைக்களத்தின் வருடாந்த நிர்வாக அறிக்கை


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ ஏ. டி. சம்பிக பிரேமதாச அவர்களுக்கு "பி. ஹரிசன் சமுதாய அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

ஒத்திவைக்கப்பட்ட விவாதம் நாளை தொடரப்படவுள்ளது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்துக்கான வழிகாட்டல்கள்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் பி. பெரேரா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2013 மார்ச் 06ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks