பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய லொத்தர் சபை
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான துறுசவிய நிதியம்
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான செலசினெ தொலைக்காட்சி நிறுவனம்
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(v) 2011 ஆம் ஆண்டுக்கான பதுளை மாவட்டச் செயலகம்
(vi) 2011 ஆம் ஆண்டுக்கான பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு
(vii) 2011 ஆம் ஆண்டுக்கான மறியற்சாலைத் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கை
(viii) 2011 ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவினத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2012
பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்கள்
1. 2010 மே மாதம் 05ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை மூலம் தடைபெறாமல்,
• சுற்றாடல் பற்றிய ஆலோசனைக் குழு - சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி பற்றிய ஆலோசனைக் குழு
எனவும்
• தொழில்நுட்பம், ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக் குழு - தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி பற்றிய ஆலோசனைக் குழு
எனவும் கெளரவ பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.
2. பின்வரும் ஐந்து (05) ஆலோசனைக் குழுக்கள் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக என்றும்,
(i) சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு
(ii) முதலீட்டு ஊக்குவிப்பு பற்றிய ஆலோசனைக்குழு
(iii) தாவரவியல் பூங்காக்கள், பொதுப் பொழுதுபோக்கு அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
(iv) கல்விச் சேவைகள் பற்றிய ஆலோசனைக்குழு
(v) வனசீவராசிகள் வளப் பேணுகை பற்றிய ஆலோசனைக்குழு
கெளரவ பாராளுமன்ற சபை முதல்வர் முன்வைத்த பிரேரணையை சபை இணங்கியேற்றது.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ மனுஷ நாணாயக்கார அவர்களுக்கு
"மொஹான் லால் கிரேரு மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் கல்வி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"'உதுரு வசந்தய' கருத்திட்டங்கள்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1908 மணியளவில் பாராளுமன்றம் 2013 பெப்ரவரி 20ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.