பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 ஆம் ஆண்டுக்கான மின்வலு சக்தி அமைச்சின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கை
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான புடவை பங்கீட்டுச் சபை
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம்
(v) 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான தொழிநுட்ப ஆணைக்குழு
(vi) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபை
(vii) 2010 ஆம் ஆண்டுக்கான குருனாகல் ப்ளான்டேஷன்ஸ் லிமிற்றட்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ ராஜீவ விஜேசிங்க அவர்களுக்கு
"அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மைய (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையில் பிரேரிக்கப்பட்டன:-
(i) பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தம்) - ஒத்திவைக்கப்பட்ட விவாதம் 2013 பெப்ரவரி 08ஆந் திகதி, வெள்ளிக்கிழமை தொடரப்படவுள்ளது.
(ii) இலங்கை புனித சூசையப்பர் சகோதரர் சபை (திருத்தம்) - சபையால் நிறைவேற்றப்பட்டது.
(iii) ஹங்குரான்கெத மாதன்வல ரஜமகா விகாரை அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) - இரண்டாம் மதிப்பீடு செய்யப்பட்டு (சட்டவாக்க) நிலையியற்குழு "பீ"க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"சட்ட ஒழுங்குவிதிகளையும் கட்டளைகளையும் மீள் பதிப்புச் செய்தல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1847 மணியளவில் பாராளுமன்றம் 2013 பெப்ரவரி 07ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.