E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவனம்
(iii) 2009.04.01 இலிருந்து 2010.03.31 வரையான மாந்தை உப்பு லிமிற்றெட்
(iv) 2009/2010 ஆம் ஆண்டுக்கான எஸ்.ரீ.சி. ஜெனரல் டிரேடிங் கம்பனி லிமிடெட்
(v) 2010 ஆம் ஆண்டுக்கான சுகததாச தேசிய விளையாட்டுப் பல்தொகுதி அதிகார சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vi) 2011 ஆம் ஆண்டுக்கான அரசாங்க சேவை ஆணைக்குழு
(vii) 2011 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட செயலகம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(viii) சனாதிபதியினால் வழங்கப்பட்ட 2012 பெப்புருவரி 29 ஆம் திகதிய 1747/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் திருத்தப்பட்ட 2010 நவெம்பர் 22 ஆம் திகதிய 1681/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மற்றும் அரசியலமைப்பின் 44(2) உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1987 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, பொது ஒப்பந்தங்கள் சட்டத்தின் 36 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட 1988 ஆம் ஆண்டு யூன் மாதம் 02 ஆம் திகதிய 508/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை திருத்தப்பட்டு கைத்தொழில், வாணிப அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2012 .08.30ஆம் திகதிய 1773/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்புப் பிரேரணை

"ரிசானா நபீகிற்கு மரண தண்டனை நிறைவேற்றல்" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ரன்ஜன் ராமநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2013 பெப்ரவரி 06ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks