E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(ii) 2012.05.15 ஆம் திகதிய 1758/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(iii) 2012.05.31 ஆம் திகதிய 1760/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி

(iv) 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம்
(v) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை
(vi) 2010 ஆம் ஆண்டுக்கான ஹோமியோபதி வைத்திய சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தம்)

2005ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க, பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களுக்கு "இலங்கை எழுத்தாளர்கள் அமைப்பு (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் கலாசார, கலை அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(ii) கெளரவ அருந்திக்க பர்னாந்து அவர்களுக்கு "எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் பதவியிலிருந்து கெளரவ (கலாநிதி) (திருமதி) உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்சே ராலஹாமிலாகே ஷிராணி அங்சுமாலா பண்டாரநாயக்கவை அகற்றுவதற்காக அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கு பாராளுமன்றத்தின் பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்கும் பொருட்டு அரசியலமைப்பின் 107(2) உறுப்புரையின் பிரகாரம் சமர்ப்பிக்கப்படுகின்ற பிரேரணையினை பரிசீலனை செய்தல்.

ஒத்திவைக்கப்பட்ட விவாதம் நாளை தொடரப்படவுள்ளது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜனவரி 11ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks